இருள் மறைத்த நிழல் -02
தாத்தா வரும்வரை இங்கே தங்கி வேலைக்கும் போய் வர
வேண்டியது..அவர் வந்தவுடன், அலுவலகத்திற்கு அருகாக சக்திக்கு தகுந்த அளவில்
ஒரு வீடு பார்த்துக்கொண்டு அவரோடு மரியாதையாக இங்கிருந்து நகர்ந்து
விடவேண்டும் என்று முடிவு செய்த பின்தான் மனம் லேசானது. ஏனோ அந்த 'சின்ன
அய்யா'வின் - சின்ன அய்யாவா? சிடுசிடு அய்யா என்றால் பொருத்தமாக இருக்கும் -
அந்த அவனின் புண்ணியத்தால் வந்த ஒரு மணி நேரத்திலேயே தன்னை 'அழையா
விருந்தாளியாக' உணரத் தொடங்கியிருந்தாள் மிதுனா.
" சுந்தரமும் அவன் பேரனும் தான் அம்மா அந்த வீட்டில் " என்று தன் தாத்தா சொன்னாரே..அப்போதெல்லாம்.. அது ஒரு பொருட்டாக அவளுக்குப படவில்லை. இப்போதோ, அந்த பேரனின் ஏளன பார்வையும், கடுமையும் நெஞ்சில் நெருட..இவனோடு ஒரே வீட்டிலா என்றிருந்தது. அதே வீட்டிலேயே அவனும் இருந்தாலும், எது வேண்டும் என்றாலும் அந்த முத்துவை வரந்தாவிலோ தோட்டத்திலோ தேடி சென்று கேள் என்று அவன் சொன்னது, 'இனி என்னை தொந்தரவு செய்யாதே' என்று சொல்லாமல் சொல்லியதாக அவளுக்கு உறுத்தியது. சரியான முசுடு! பெரிய மன்மதன் என்று நினைப்பு! வாய் முனுமுனுக்கையிலே மனம் 'மன்மதனே தான்' என்று இடைசெருகியது!
மன்மதனோ அன்றி வெறும் மனிதனோ! ஓரிரு மாதங்களில் ஜாகையை மாற்றிக்கொண்டு நடையைக் கட்ட போகிறாள். அதுவரை இவன் கண்ணில் படாமல் ஒதுங்கி கொள்ள வேண்டும்.அவ்வளவே! அவன் தாத்தா நல்ல மாதிரியாகத்தான் தெரிகிறார். உடல் ஒத்துழைத்திருந்தால் இன்னும் கூட நன்றாக அப்போதே பேசியிருப்பார். அவரது களைத்த தோற்றம் நினைவில் வந்தது. பாவம் பெரியவர். அவருக்கு போய் இப்படி ஒரு முசுட்டு பேரன்! அவரிடம் கூட சிரிப்பானோ என்னவோ?! அவள் உள்ளே நுழைகையில் கூட 'வேறு பேச' சொல்லி சலிப்பாகதானே சொன்னான்!
எண்ணம் அவனையே சுற்றி சுற்றி வர, சே! முதலில் சுந்தரம் தாத்தா கூறியது போல ஒரு குளியலாவது போட்டால் தான் புத்தி உருப்படியாக யோசிக்கும் என்று மிதுனாவுக்கு தோன்றியது. ஆனால் அந்த attached bathroom-ல் குளிக்கும் போதும், 'அப்படி அவனுக்கு சலிப்பூட்டுமாறு என்னத்தைதான் இந்த தாத்தா பேசியிருப்பார் ?!' என்று அவள் குரங்கு மனம் அவனிலேயே நின்று குறுகுறுத்தது.

பல பல எண்ணங்கள்..கை தன் பாட்டில் சோப்பு போட அலுப்பு தீர குளித்து
முடித்தாள் மிதுனா. கையோடு பாத்ரூமிற்கு கொண்டுசென்றிருந்த சுடிதாரை அணிய
முற்படுகையில் தான் இந்த வீட்டில் சுடிதார் அனுமதிக்கப்பட்ட உடை தானா?
என்று ஒரு சிறு சஞ்சலம் ஏற்பட்டது. இந்த
காலத்தில் சுடிதார் தேசிய உடையே ஆகிவிட்டது தான். ஆனால் அவள் தாத்தாவிற்கு
என்னவோ அதில் அவ்வளவு பிடித்தம் இல்லை. பேத்திக்காக, கொஞ்சம்
விட்டுக்கொடுத்தவர், சேலையின் மகத்துவம் பற்றி அவ்வப்போது சொல்லி,
மறைமுகமாய் சுடிதாரை - சுடிதார் என்று இல்லை - சேலை அல்லாத எல்லா
உடைகளையும் சாடுவார். அதனால் பெரும்பாலும் வெளியே செல்கையில் அவள் சேலை
தான் உடுத்துவது.
இந்த சுந்தரம் தாத்தாவும், தன் பாட்டனை போன்றே சேலையே உன்னதம் என்று நினைப்பவராக இருந்து விட்டால்? வரும் போது சேலையில் தான் வந்திருந்தாள். வந்தவுடன் வேலைபற்றி வேறு பேச வேண்டுமே..சேலையில் கொஞ்சம் பெரிய பெண்ணாய் பொறுப்பாய் தெரிவோமே என்று ஒரு எண்ணம். இப்போது ஏதோ நினைப்பில் சுடிதார் அணிந்து..கீழே இருந்த பெரியவர் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே அவர் பேரனிடம் நல்ல சுமுகம் இல்லை.. வேண்டாம்..சேலையே கட்டிக்கொள்வோம் என மிதுனா தீர்மானித்தாள்.
கையில் இருந்த சுடிதாரை அணியாமல், துவட்டிய டவலையே உடலுக்கு குறுக்காக சுற்றிக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவள், கட்டில் மேல் திறந்திருந்த தன் suitcase-ல் மேலாக கிடந்த ஒரு சேலையையும், அதற்குண்டான பாவாடை, சட்டையையும் எடுத்து அணிய முற்பட்டாள். சேலைக்கு முன் கொசுவம் வைத்துக்கொண்டிருந்த போது, சற்றும் எதிர்பாராதவிதமாக கதவு திறந்துக்கொண்டது. ஒரு சின்ன அலறலுடன் கொசுவத்தை தவறவிட்டு பின் தரையில் கிடந்த முந்தானையை கொத்தாக அள்ளி அவசரமாய் தன் மேல் போட்டுக்கொண்டவள், அங்கே அதே திடுக்கிடலுடன் அவன் - அவளிடம் அப்படி சிடுசிடுத்தவன் நிற்பதை கண்டதும், அவனுக்கு முதுகு காட்டி திரும்பிக்கொண்டு, "என்ன? என்ன வேண்டும்?" என்று தன் முறையாய் குரலின் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு சிடுசிடுத்தாள்.
அவளை அந்த கோலத்தில் கண்டதும் சற்று தடுமாறிய அவனும் கணநேரத்தில் தன்னை சமாளித்துக்கொண்டான். பார்வையில் தென்பட்ட பிரமிப்பை மறைத்துக்கொண்டு, "சே!" என்று அவளுக்கு எதிர் புறமாக திரும்பி தலையை கோதிக்கொண்டே,
"கதவைத் தட்ட தான் தெரியாது! உடை மாற்றும்போது, கதவைத் தாளிட வேண்டும் என்று கூடவா தெரியாது?!" என அவளையே குற்றம் சாட்டினான்!

அவனது இந்த அநியாய குற்றச்சாட்டில் அதிர்ந்து போனாள் மிதுனா. Auto lock
கதவு என்று நினைத்தாளே?! அவனுக்கு எதிர்புறம் திரும்பிகொண்டே, முந்தானையை
சரியாக தன் மேல் சரித்துக்கொண்டவள், அவனுக்கு இணையான கோபத்துடன், "நீங்கள்
தான் எல்லா 'basic manners'-ம் தெரிந்தவர் ஆயிற்றே! கதவை தட்டி விட்டு
வருவதற்கென்ன?!" என்று பதிலடி கொடுக்க முனைகையில், அவனோ அதற்குள், "முத்து
முட்டாள்!" என்றபடியே இரண்டிரண்டு படிகளாய் தாவி கீழிறங்கிவிட்டிருந்தான்.
சாத்திய கதவைத் தட்டாமல் இவன் அநாகரீகமாய் திறந்ததற்கு முத்து எப்படி
முட்டாளாவான்? யார் மீதாவது வீண் பழி போடுவதே இவன் வழக்கமா?!
அவன் தயவில் அவன் வீட்டில் வாழ வேண்டிய தன் நிலை மீது கோபம் மிக, வேகமாக கதவை சாத்தினாள் மிதுனா. எல்லா கூத்திற்கும் காரணமான கதவு சரியாக lock-ஆகாததை அப்போதுதான் கவனித்தாள். "சே!" இதைக் கூட கவனிக்காமல் புது இடத்தில் சாவகாசமாக உடை மாற்றிக்கொண்டு..அவன் கோபத்திலும் ஒரு நியாயம் இருப்பது இந்த நேரத்தில் புரிவது அநியாயமாகப்பட்டது அவளுக்கு. நல்லவேளை சற்று தாமதமாக வந்தான். ஒரு ஓரிரு நிமிடங்கள் முன்னதாக வந்திருந்தான் என்றால்...சீசீ..அவன் முகத்தை எப்படி பார்ப்பாள் அவள்!
அவனைக் காண விருப்பமில்லாமல், ஜன்னலையும் சாத்த முற்படுகையில், கீழே முத்துவும் அவனும் பேசுவது கேட்டது. "பெரியய்யா தானுங்க மேல ஏற்பாடு செய்ய சொன்னாரு. நீங்க கூட அவர கேட்டு செய்ய சொன்னீங்களே..அதான் சின்னய்யா.." என்று பவ்யமாக விளக்கம் கூறிக்கொண்டு இருந்தான்.
ஓ அது தான் முத்துவின் குழப்பத்திற்கு காரணமோ?! இந்த சின்ன எஜமான் கீழறை என்று சொல்ல, பெரிய எஜமான் ஏற்கெனவே மேலறை என்று சொல்லிருப்பார். இந்த அறையில் அவள் இருப்பது தெரியாமல் இந்த கடுவன் பூனையும் கதவை டக்-கென திறந்துவிட்டான் போலும்.. இந்த லட்சணத்தில் தான் வேறு "என்னைச் சொன்னீர்களே, நீங்களாவது கதவைத் தட்டிவிட்டு வந்திருக்கலாமே? " என்று தர்க்கம் செய்யத் துணிந்தாளே! நல்லவேளை அதற்குள் அவன் அங்கிருந்து முத்துவைத் தேடி அகன்றுவிட, மேலும் மூக்குடையாமல் தப்பித்தாள்!
இந்த கலாட்டா எல்லாம் ஓயட்டும் என்று ஒரு அரை மணி நேரம் காத்திருந்தாள் மிதுனா. பசி வயிற்றைக் கிள்ளியது. கீழே அவனிருப்பானோ என்றும் கூச்சமாக இருந்தது. கணநேரமானாலும் அவன் பார்வையில் தென்பட்ட மாறுதலை அவள் கவனித்துவிட்டிருந்தாளே!
கீழே எதுவும் பேச்சுக் குரல் கேட்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்ட பின் மெல்ல தாத்தாவின் அறைக்கு சென்றாள்.

கீழ்த்தளம் ஆள் அரவமின்றி இருந்தது. நல்லவேளை தாத்தா தன் குட்டி தூக்கத்தை
முடித்துவிட்டிருந்தார். அறை வாயிலில் அவள் தயங்கி நிற்பதை பார்த்தவர்
முகம் மலர, "வாம்மா, குளித்தாயிற்றா? அறை வசதியாக இருக்கிறதா?" என்று அக்கறையாக விசாரித்தார்.
"ஆயிற்று தாத்தா. அறையும் வசதியாக..மிக வசதியாக இருக்கிறது" என்று தானும் முகமலர்ந்து உரைத்தாள் மிதுனா.
"ரொம்ப சந்தோஷம், அம்மா. விஜி முன்பு உபயோகப்படுத்தியது. அடுத்த அறையை விரிவுபடுத்தி அதற்கு மாறியபின் இந்த அறை உபயோகத்தில் இல்லை. விஜியுடையது என்பதால் சகல வசதிகளும் இருக்கும். அதனால் தான் அந்த அறையையே உனக்கு ஒதுக்கி தர சொல்லிருந்தேன்" என்றார்.
வாய்க்கு வாய் 'விஜி', 'விஜி' என்கிறாரே.. யாராய் இருக்கும்? இவருக்கு ஒரே ஒரு பேரன் மட்டும் தான் என்று தாத்தா கூட சொன்னாரே..ஒரு வேலை ஆண் வாரிசு வகையில் இவன் ஒருவன் மட்டும் என்றிருப்பாரோ.. பார்த்தால் பேத்தியும் இருக்கிறாள் போல! திருமணமாகி இருக்குமோ? தன் தாத்தாவிடம் இந்த விஷயமாவது உருப்படியாக கேட்டு வந்திருக்கலாம் என்று காலம் கடந்து தோன்றியது மிதுனாவுக்கு.
"உன் தாத்தாவும் இங்கிருந்தால் நன்றாக இருக்கும் அம்மா" நீண்ட பெருமூச்சுவிட்டார் பெரியவர். அவள் தாத்தா அவளோடு இருந்திருந்தால் அவள் எதற்கு இங்கே வர போகிறாளாம் என்று மிதுனா நினைத்தாலும் அதை சொல்லாமல் விடுத்தாள்.
"என்..எங்களால் உங்களுக்கு தொந்தரவு...தாத்தா" அவள் முடிக்குமுன், "இல்லம்மா..இல்லை..நீ வந்திருப்பது எனக்கு ஒருவகை ஆறுதல் தாயே..தனிமையோடு போராடித் தவிக்கும் கிழவன் நான். சந்தானத்திடம் எவ்வளவோ எடுத்து சொல்லித்தான் உன்னை இங்கே அனுப்பி வைக்க சம்மதித்தான். உன் வருகை நான் விரும்பி கேட்ட வேண்டுகோள் தானம்மா. தொந்தரவே அல்ல " என்று உணர்ச்சி பொங்க கூறி அவளைத் திகைக்க வைத்தார் பெரியவர்.

தாத்தா இதையெல்லாம் சொல்லவேயில்லையே.. விடுதிப் பேச்செடுத்ததுமே அவள் வாயை
அடைத்தவர், அடுத்த நாள் திடுமென, "சுந்தரம் என் உயிர் நண்பன். உன்னை தன்
சொந்த பேத்தி போல பார்த்துக் கொள்வான்" என்று மட்டும்தான் இரத்தின
சுருக்கமாகக் கூறினார். அதுசரி! கடந்த ஆறேழு மாதங்களாகவே தாத்தா பேசுவது
வெகுவாக குறைந்து போயிற்றே! எப்போதும் ஒரு கவலை..என்னவென்று வாய் விட்டு
சொன்னால்தானே?! 'என்ன தாத்தா' என்று தன்னை மீறி எப்போதாவது கேட்டால்..
ஆதரவாய் அவள் தலையை வருடுவார். கம்மிய குரலில் சில சமயம் 'உனக்கு ஒரு வழி
செய்யாமல்.. செய்ய வேண்டும்.." என்று கோர்வையின்றி தடுமாறுவார். அவர்
அப்படித் துன்புறுவதை காண, கேட்க சகியாமல் அவளும் மேற்கொண்டு எதுவும்
துருவ மாட்டாள். தாத்தாவைப் பார்க்க வேண்டும் போல ஏக்கமாக இருந்தது
அவளுக்கு.
அதைக் கண்டு கொண்ட பெரியவரும், பேச்சை திசை திருப்ப எண்ணி, "சரி வாம்மா, பேசிக்கொண்டே சாப்பிடலாம்" என்று கூறி அவள் தொடர்வாள் என்ற நம்பிக்கையோடு அவர் பாட்டில் டைனிங் டேபிளுக்கு சென்று அமர்ந்தார். அவரது கடுவன் பூனை பேரனும் வருவானோ?! அவன் வராவிட்டால் பரவாயில்லை என்றிருந்தது அவளுக்கு. அந்த 'விஜி'யும் வருவாளா? யாரையும் கண்ணில் காணோமே..பேரன் தான் சிடுமூஞ்சி..அந்த பேத்தியாவது அவள் வயதை ஒத்தவளாய் இருந்து, அவளோடு சிநேகம் பாராட்டினால் நன்றாக இருக்குமே. அந்த விஜியை பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட, சுற்றி வளைத்து, "வந்து.. இருக்கட்டும் தாத்தா..வி..விஜியும் வநதுவிடட்டுமே..விஜியோடே சேர்ந்தே சாப்பிடலாம்.." இழுத்தாள்.
அந்த விஜி இன்னும் இந்த வீட்டில் தான் இருக்கிறாளா..என்று மறைமுகமாக அறிந்துகொள்ளும் முயற்சியாம்! தன் சாமர்த்தியத்தை மனதுக்குள் மெச்சியவள் அழுத்தமான காலடி ஓசை கேட்கவும் பேச்சை நிறுத்தி மாடிப்படிகளை ஏறிட்டாள். ஒற்றை புருவத்தை மேலே ஏற்றி அவளை ஏளனமாய் பார்த்தபடி, மடிப்பு கலையாத சட்டையின் கைகளை முழங்கைவரை மடித்துவிட்டவாறு படிகளில் கம்பீரமாக இறங்கி டைனிங் டேபிளை நோக்கி வந்து கொண்டிருந்தான் அவன் - அந்த பேரன்!
"இப்போது என்ன தவறாக சொல்லிவிட்டேனாம்?! வீட்டு மனிதர்கள் வந்தபின் எல்லாருமாக சாப்பிடலாம் என்று சொன்னதில் என்ன பெரிய தவறை கண்டுபிடித்துவிட்டானாம்?! அவனது trademark ஏளனப் பார்வைக்கு பதிலடியாய் அவள் இதழ்களில் தோன்றிய இகழ்ச்சி, தாத்தா அவனைக் காட்டி, "இதோ விஜியே வந்தாச்சே! " என்றதும் தோன்றிய வேகத்திலேயே மறைந்தது!

கடவுளே! இவன் பெயர்தான் விஜியா?! முன்பின் தெரியாதவன்..அதுவும் சில
மணிகளுக்கு முன் நடந்த அந்த சேலை சம்பவத்திற்குப்பின் .. எதுவுமே நிகழாதது
போல..உரிமையோடு அவன் பேரை வேறு சுருக்கி..விஜி வரட்டும்..விஜியோடு
சாப்பிடலாம்..என்று வெட்கமில்லாமல்...சீசீ..பின் அவன் ஏன் அவளை அப்படி
ஏளனமாய் பார்க்கமாட்டான்?! ஏன்தான் இவன் பார்வையில் தான் இப்படித்
தாழ்ந்துகொண்டே போகிறேனோ என்று கழிவிரக்கம் பொங்கியது மிதுனாவுக்கு.
சமாளித்துக்கொண்டு, இந்த ஒன்றிலாவது தன்னை சீர் செய்துகொள்ள நினைத்து, "நான்..வி..விஜி என்றால் உங்கள் பேத்தி என்று நினைத்தேன் தாத்தா.." என அழாக்குறையாக சொல்லி முடித்தாள். அவள் ஏதோ பெரிய Joke சொன்னது போல வாய் விட்டு சிரித்தார் தாத்தா. அந்த விஜி அவளை ஒரு தரம் கூர்ந்து நோக்கியதோடு சரி.
"பேத்தியா?!.. நல்லா நினைத்தாயம்மா. ஆளுயரம் ஆணழகனாய் நிற்கும் என் பேரனை.." என்று மீண்டும் சிரித்தவர், "இவன் பெயர் விஜய நளந்தன், அம்மா. நான் விஜி என்றுதான் அழைப்பது." என்றார்.
அதை அறிமுகமாக ஏற்று அவனைப் பார்க்க அவளுக்குத் துணிவில்லை. அவனும் அதை எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. அவளது விளக்கத்தை அவன் ஏற்றுக்கொண்டானோ இல்லையோ ஆனால் மறுக்கவுமில்லை. தாத்தாவிடம் மட்டும் பொதுப் பேச்சு பேசிவிட்டு விரைவாகவே உணவையும் முடித்துக் கொண்டு, "நான் அவசரமாக வெளியே செல்ல வேண்டும். Excuse me " என்றுப் பொதுப்படையாக விடைபெற்றுச் சென்றான்.
இருள் மறைத்த நிழல் - 6
நளந்தன் சென்றபின் சிறிது நேரம் தாத்தா அவளோடு பேசிக் கொண்டிருந்தார். பேச்சு அவள் தாத்தாவைப் பற்றியதாகவே இருந்தது. "உனக்கு இங்கே என்ன வேண்டும் என்றாலும் தயங்காமல் என்னிடம் கேளம்மா" என்ற அவரது அன்பான குரல் தன் தாத்தாவில் மூழ்கி கிடந்த அவள் நினைவுகளை மீட்டு வந்தது. இருக்க இடம், பெரியவரின் பாதுகாப்பு..இன்னும் என்ன வேண்டும்?..இருக்கிறதே..பிற ர் கையை எதிர்பார்க்காது வாழ வகை செய்யும் வேலை..அதுவும் வேண்டுமே..
அவளது எண்ணத்தைப் படித்தவர் போல சுந்தரமே அந்த பேச்சையும் எடுத்தார். "உனக்கொரு வேலைத் தேடித் தருமாறு சந்தானம் கேட்டானம்மா. என் பேத்தி போல உரிமையோடே இங்கிருக்கலாம் நீ. ஆனால் அவனுக்கு உன் கையில் ஒரு வேலை இருக்க வேண்டும் என்று..சரி..அதுவும் சரிதான். ஆயிரம் இருந்தாலும் சுயசம்பாத்தியம் ஒரு பாதுகாப்புதான். உன் படிப்பையும் பாழடிக்கக்கூடாது தான்." என்று சொல்லி மூச்சு வாங்கியவர் வினாடி தாமதத்திற்குப்பின் விட்ட இடத்தில் தொடர்ந்தார்.
"ஒரு சில வாரங்கள் பொறுத்துக் கொள்ளம்மா. விஜியின் வெளியூர் பயணமெல்லாம் முடிந்ததும் அவனிடம் சொல்லி உன் வேலைக்கும் ஏற்பாடு செய்கிறேன். அதற்குள் உனக்கும் இந்த இடம், மனிதர்கள், ஊர் எல்லாம் பழகி விடும்" என்றார்.
இதற்கும் அந்த நளந்தனிடம் தான் போய் நிற்க வேண்டுமா என மனம் சோர்ந்தது. இருப்பினும் மனதை மறைத்தபடி மென் புன்னகையோடு "சரி தாத்தா. அது வரை வீட்டில் ஏதாவது வேலை சொல்லுங்கள். உங்களுக்கு உதவியாக ஏதாவது செய்கிறேனே..சும்மா இருக்க எனக்கும் போரடிக்கும் " என்றாள்.
என்னதான் தன் தாத்தாவும் இவரும் உயிர் நண்பர்கள் என்றாலும், தன்னை சொந்த பேத்தி போல என்று இவரே சொன்னாலும்..ஓசியில் சோம்பேறியாய் அங்கே ஒட்டிக்கொள்ள அவளுக்குப் பிடித்தம் இல்லை. இந்த பெரியவர் கூறியது போல தன் தாத்தாவோடு இங்கே ஓரிரு நாட்கள் விருந்தாட வந்திருந்தால் அது ஒரு மாதிரி. தானோ கிட்டத்தட்ட பிழைப்பிற்கு வழி தேடி வந்தவள். தன் சுயகௌரவத்திற்கு பங்கமின்றி இங்கே இருக்கப் போகும் கொஞ்ச நாட்களையும் மரியாதையாய் கழிக்கவே அவள் விரும்பினாள்.
"என்னம்மா, அந்நியமாகவே பேசுகிறாயே. சரி..உன் திருப்திக்கு , இங்கே உன்னால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய். சுருக்கமாக..ம்ம்..சரியாக சொல்லப்போனால், இதை உன் வீடாக நினைத்து உன் விருப்பம் போல் என்ன வேண்டுமானாலும் செய், எப்படி வேண்டுமானாலும் இரு " என்று வெகு தாராளமாய் உரிமையளித்தார்.
அதுவே அமைதி இழந்த அவள் மனதுக்கு நங்கூரமிட, அவரது களைத்த முகத்தை கவனித்துவிட்டு, "நீங்கள் ஓய்வெடுங்கள் தாத்தா.." என்று அவரிடம் இருந்துத் தெளிவான மனதுடன் விடைபெற்றாள்.
தன்னறைக்கு வந்தவள் சற்றுநேரம் அங்கிருந்த இருக்கையில் சாயந்து கண்மூடி கிடந்தாள். இனி சில மாதங்களுக்கு இந்த அறைதான் அவள் கூடு. தானும் தன் தாத்ததாவுமாக இருந்த கிராமத்து சிறுவீடு நினைவில் மோதியது. அதையே தனிமை என்று குறையாக தாத்தாவிடம் சினுங்கியது ஒரு காலம்! இன்று அந்த தனிமையிலும் தனிமையாய் தான் மட்டும் தனித்திருப்பது அதீத குறையாய் மருட்டியது.
என்ன இது?! இன்னும் சில மாதங்கள்.. பின் காசியாத்திரை முடித்து பேத்தியைப் பார்க்க தன் தாத்தா ஓடோடி வந்துவிடப் போகிறார். அதற்குள் தனிமை அது இது என்று மனதை போட்டு உலப்பிக்கொண்டு.. வலுக்கட்டாயமாக மனதை திருப்ப முயன்றாள் மிதுனா.
இந்த சுந்தரம் தாத்தா சீக்கிரமே வேலைக்கு வழி செய்தால் நன்றாக இருக்கும். ம்ம்..அதற்கு அந்த 'நள மகாராஜா' மனது வைக்க வேண்டுமே! இந்த நேரம் பார்த்து தானா அவனும் வெளியூர் செல்ல வேண்டும்? இந்நேரம் புறப்பட்டிருப்பானோ? அதுதான் அவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டானோ? அவன் எப்போதுமே முசுடு தானோ? மிதுனா தலையை உலுக்கிக் கொண்டாள். அங்கே சுற்றி இங்கே சுற்றி மறுபடியும் அந்த 'நளந்தனிலேயே' நிற்கிறதே இந்தப் பாழாய் போன மனது!
சமாளித்துக்கொண்டு, இந்த ஒன்றிலாவது தன்னை சீர் செய்துகொள்ள நினைத்து, "நான்..வி..விஜி என்றால் உங்கள் பேத்தி என்று நினைத்தேன் தாத்தா.." என அழாக்குறையாக சொல்லி முடித்தாள். அவள் ஏதோ பெரிய Joke சொன்னது போல வாய் விட்டு சிரித்தார் தாத்தா. அந்த விஜி அவளை ஒரு தரம் கூர்ந்து நோக்கியதோடு சரி.
"பேத்தியா?!.. நல்லா நினைத்தாயம்மா. ஆளுயரம் ஆணழகனாய் நிற்கும் என் பேரனை.." என்று மீண்டும் சிரித்தவர், "இவன் பெயர் விஜய நளந்தன், அம்மா. நான் விஜி என்றுதான் அழைப்பது." என்றார்.
அதை அறிமுகமாக ஏற்று அவனைப் பார்க்க அவளுக்குத் துணிவில்லை. அவனும் அதை எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. அவளது விளக்கத்தை அவன் ஏற்றுக்கொண்டானோ இல்லையோ ஆனால் மறுக்கவுமில்லை. தாத்தாவிடம் மட்டும் பொதுப் பேச்சு பேசிவிட்டு விரைவாகவே உணவையும் முடித்துக் கொண்டு, "நான் அவசரமாக வெளியே செல்ல வேண்டும். Excuse me " என்றுப் பொதுப்படையாக விடைபெற்றுச் சென்றான்.
இருள் மறைத்த நிழல் - 6
நளந்தன் சென்றபின் சிறிது நேரம் தாத்தா அவளோடு பேசிக் கொண்டிருந்தார். பேச்சு அவள் தாத்தாவைப் பற்றியதாகவே இருந்தது. "உனக்கு இங்கே என்ன வேண்டும் என்றாலும் தயங்காமல் என்னிடம் கேளம்மா" என்ற அவரது அன்பான குரல் தன் தாத்தாவில் மூழ்கி கிடந்த அவள் நினைவுகளை மீட்டு வந்தது. இருக்க இடம், பெரியவரின் பாதுகாப்பு..இன்னும் என்ன வேண்டும்?..இருக்கிறதே..பிற
அவளது எண்ணத்தைப் படித்தவர் போல சுந்தரமே அந்த பேச்சையும் எடுத்தார். "உனக்கொரு வேலைத் தேடித் தருமாறு சந்தானம் கேட்டானம்மா. என் பேத்தி போல உரிமையோடே இங்கிருக்கலாம் நீ. ஆனால் அவனுக்கு உன் கையில் ஒரு வேலை இருக்க வேண்டும் என்று..சரி..அதுவும் சரிதான். ஆயிரம் இருந்தாலும் சுயசம்பாத்தியம் ஒரு பாதுகாப்புதான். உன் படிப்பையும் பாழடிக்கக்கூடாது தான்." என்று சொல்லி மூச்சு வாங்கியவர் வினாடி தாமதத்திற்குப்பின் விட்ட இடத்தில் தொடர்ந்தார்.
"ஒரு சில வாரங்கள் பொறுத்துக் கொள்ளம்மா. விஜியின் வெளியூர் பயணமெல்லாம் முடிந்ததும் அவனிடம் சொல்லி உன் வேலைக்கும் ஏற்பாடு செய்கிறேன். அதற்குள் உனக்கும் இந்த இடம், மனிதர்கள், ஊர் எல்லாம் பழகி விடும்" என்றார்.
இதற்கும் அந்த நளந்தனிடம் தான் போய் நிற்க வேண்டுமா என மனம் சோர்ந்தது. இருப்பினும் மனதை மறைத்தபடி மென் புன்னகையோடு "சரி தாத்தா. அது வரை வீட்டில் ஏதாவது வேலை சொல்லுங்கள். உங்களுக்கு உதவியாக ஏதாவது செய்கிறேனே..சும்மா இருக்க எனக்கும் போரடிக்கும் " என்றாள்.
என்னதான் தன் தாத்தாவும் இவரும் உயிர் நண்பர்கள் என்றாலும், தன்னை சொந்த பேத்தி போல என்று இவரே சொன்னாலும்..ஓசியில் சோம்பேறியாய் அங்கே ஒட்டிக்கொள்ள அவளுக்குப் பிடித்தம் இல்லை. இந்த பெரியவர் கூறியது போல தன் தாத்தாவோடு இங்கே ஓரிரு நாட்கள் விருந்தாட வந்திருந்தால் அது ஒரு மாதிரி. தானோ கிட்டத்தட்ட பிழைப்பிற்கு வழி தேடி வந்தவள். தன் சுயகௌரவத்திற்கு பங்கமின்றி இங்கே இருக்கப் போகும் கொஞ்ச நாட்களையும் மரியாதையாய் கழிக்கவே அவள் விரும்பினாள்.
"என்னம்மா, அந்நியமாகவே பேசுகிறாயே. சரி..உன் திருப்திக்கு , இங்கே உன்னால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய். சுருக்கமாக..ம்ம்..சரியாக சொல்லப்போனால், இதை உன் வீடாக நினைத்து உன் விருப்பம் போல் என்ன வேண்டுமானாலும் செய், எப்படி வேண்டுமானாலும் இரு " என்று வெகு தாராளமாய் உரிமையளித்தார்.
அதுவே அமைதி இழந்த அவள் மனதுக்கு நங்கூரமிட, அவரது களைத்த முகத்தை கவனித்துவிட்டு, "நீங்கள் ஓய்வெடுங்கள் தாத்தா.." என்று அவரிடம் இருந்துத் தெளிவான மனதுடன் விடைபெற்றாள்.
தன்னறைக்கு வந்தவள் சற்றுநேரம் அங்கிருந்த இருக்கையில் சாயந்து கண்மூடி கிடந்தாள். இனி சில மாதங்களுக்கு இந்த அறைதான் அவள் கூடு. தானும் தன் தாத்ததாவுமாக இருந்த கிராமத்து சிறுவீடு நினைவில் மோதியது. அதையே தனிமை என்று குறையாக தாத்தாவிடம் சினுங்கியது ஒரு காலம்! இன்று அந்த தனிமையிலும் தனிமையாய் தான் மட்டும் தனித்திருப்பது அதீத குறையாய் மருட்டியது.
என்ன இது?! இன்னும் சில மாதங்கள்.. பின் காசியாத்திரை முடித்து பேத்தியைப் பார்க்க தன் தாத்தா ஓடோடி வந்துவிடப் போகிறார். அதற்குள் தனிமை அது இது என்று மனதை போட்டு உலப்பிக்கொண்டு.. வலுக்கட்டாயமாக மனதை திருப்ப முயன்றாள் மிதுனா.
இந்த சுந்தரம் தாத்தா சீக்கிரமே வேலைக்கு வழி செய்தால் நன்றாக இருக்கும். ம்ம்..அதற்கு அந்த 'நள மகாராஜா' மனது வைக்க வேண்டுமே! இந்த நேரம் பார்த்து தானா அவனும் வெளியூர் செல்ல வேண்டும்? இந்நேரம் புறப்பட்டிருப்பானோ? அதுதான் அவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டானோ? அவன் எப்போதுமே முசுடு தானோ? மிதுனா தலையை உலுக்கிக் கொண்டாள். அங்கே சுற்றி இங்கே சுற்றி மறுபடியும் அந்த 'நளந்தனிலேயே' நிற்கிறதே இந்தப் பாழாய் போன மனது!

0 Response to "இருள் மறைத்த நிழல் -02"
Post a Comment