சேற்றில் விளைந்தது...

பாயை விரித்துப் படுத்துக்கொண்டேன். நள்ளிரவாகியும் நித்திரைவரவில்லை. தூரத்தில் நாயொன்று எதற்கோ ஊளையிட்டுக் கொண்டிருந்தது. தலைமாட்டுக்குள் கையைவிட்டு தீப்பெட்டியைத் தேடினேன். என் மனைவியும் எழுந்துவிட்டாள்.

'என்னங்க இன்னம் தூங்கல்லயா...'

நான் எதுவும் பேசவில்லை, பாயில் கிடந்த துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு, தீப்பெட்டியை கையில் எடுத்தவாறு திண்ணைக்கு நடந்தேன். மறுபறத்தில் என் மகன் தூங்கிக் கொண்டிருக்கிறான். காலையில்தான் பல்கலைக்கழகத்திலிருந்து வந்தான். அவன் ஒரு பட்டதாரி. கிழிந்த பாயில் நுளம்புக்கடிக்குள் அவன் தூங்கும் பரிதாபத்தை சில வினாடிகள் பார்த்துக்கொண்டே திண்ணைக்குச் சென்று குத்தியில் அமர்ந்துகொண்டேன்.

முற்றத்துத் தென்னந்தோப்பிலிருந்து விளையாடிய 'குளு குளு' காற்று என்னையும் தழுவி எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டுபோகிறது. உலகமே உறங்குகிறது. என் கண்கள் மாத்திரம் அந்தப் பாக்கியத்தை இழந்துவிட்டன. நான் கண்ட கனவு நனவாகிவிட்டது. ஆம் என் மகன் ஒரு பட்டதாரி.

'வாப்பா... இனி ஒண்டுக்கும் கவலப்படாதங்க வாப்பா... எனக்கி பேங்குல வேல கெடக்கப்போகுது... நம்மட கஸ்டமெல்லாம் இனி வெலகப்போகுது...'

காலையில் அவன் வந்தவுடன் சொன்ன வார்த்தைகள் எரியும் என் காதுகளுக்குள் இன்னும் தேன் வார்க்கிறது. காலையில் அவனைப் பார்க்க எத்தனை பேர் வந்தார்கள். அத்தனைபேரும் படித்தவர்கள். வந்தவர்களை உக்கார வைப்பதற்கு என் மகன் பட்டபாடு கொஞ்சமா! வீட்டில் நல்ல பாயில்லை. நாங்கள் படுக்கும் கிழிந்தபாய்களைக் கொண்டு பொருத்தி ஒருவாறு சமாளித்துவிட்டான்.

வந்தவர்களுக்கு தேனீர் கொடுக்க அவன் பட்ட சங்கடத்தைப் பார்த்துவிட்டு நான்தான் பக்கத்துக் கடைக்குச் சென்று வழமைபோல பல்லிழித்து,
'வாறமாசம் வெள்ளாம வெட்டினா மொதல்ல ஒண்ட கடனத்தான் அடக்கிற...'

என்று கடைக்காரனுக்கு நம்பிக்கை கொடுத்து கொஞ்சம் சீனி வாங்கி வந்து கொடுப்பது பெரும் பாடாகிவிட்டது. எப்படியோ வந்தவர்களை சமாளித்து அனுப்பிய என் மகன் பட்டதாரிக்கு இன்றிரவுச் சாப்பாடு பகல் ஆக்கிய பழஞ்சோறும் பொட்டியான் சுண்டலும்தான். என்னால் என்ன செய்யமுடியும்! முடிந்தவரை உழைத்து இவனைப் படிப்பித்திருக்கிறேன். இனி இவன்தான் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும்.

இவனைப் படிப்பிக்க நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா! காலையில் கண் கழுவிக் கொண்டு என் மகன் காலை உணவுமில்லாமல் பாடசாலை செல்லும்போது என் வயிறு பற்றி எரியும். இவன் அடிக்கடி வந்து கொப்பி, புத்தகமென்று கேட்கும்போது கையில் இருந்தால் வாங்கிக் கொடுப்பேன், இல்லையென்றால் எப்படிச் சமாளித்தானோ எனக்குத் தெரியாது.

இவன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இப்படித்தான் ஒருநாள் திடீரென்றுவந்து,

'வாப்பா... ஸ்கூலால ட்றிப் போபறாங்க வாப்பா... நானும் போப்றன்... எனக்கும் நாலாயிரம் ரூவா தாங்க... கட்டாயம் தரணும்...'
என்று வற்புறுத்திவிட்டு என் தலைமீதும் மனம் மீதும் பெரும் பாறாங்கல்லை ஏற்றிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

'என்னங்க... ஒரமா யோசிக்காதங்க... மகன் அப்பிடி என்னத்த கேட்டுட்டாரு... காசி நாலாயிரம்தானே.. நீங்க கவலப்படாதங்க எல்லாப் புள்ளைகளும் போக்கொள்ள நம்மட புள்ளயும் போகத்தானே வேணும்... காசப்பத்தி நீங்க யோசிக்காதிங்க... நான் என்ர காக்கா அனிவாட்ட போப்றன்... நான் கேட்டா என்ர காக்கா இல்லண்டு செல்லமாட்டா... அண்டக்கி வீட்ட வந்த காக்கா சென்ன... தங்கச்சி நீ என்ன வேணுமெண்டாலும் எனக்கிட்டகேளு... நீ எண்ட ஒரே ஒரு தங்கச்சி, ஒனக்கு தராம வேற ஆருக்கு எண்டு... நான் காக்காட்டபோய் பின்னேரம் கேக்கப்போறன்... அவரு எனக்கி இல்லண்டு செல்லமாட்டாரு...'

என்று என் மனைவி என் தலைப்பாரம் இறங்கப் பேசிக் கொண்டிருந்தாள்.

அவள் பேச்சு எனக்கு நம்பிக்கை கொடுத்தது. சொன்னது போலவே சென்றுவிட்டாள். ஹனிபா வீட்டுவாசல் திறந்தே கிடந்திருக்கிறது. எந்தச் சலனமுமில்லாத முகத்துடன் என் மனைவி கூப்பிட்டுக்கொண்டே உள்ளே சென்றிருக்கிறாள்.

'காக்கா... இரிக்கங்களா..!'

'ஓமோம்... வாங்க தங்கச்சி... எங்க மச்சான் வரல்லயா..?' ஹனிபா நல்ல கனிவுடன் தான் வரவேற்றிருக்கிறான். சத்தமில்லாமல் சமயலறைக்குள் வேலை செய்துகொண்டிருந்த ஹனிபாவின் மனைவி கொஞ்சம் சத்தம் போட்டுக் கூப்பிட்டாள்.
'ஞ்சப்பாருங்க... கொஞ்சம் வாங்க...'

மனைவியின் குரல் கேட்டால் மறுகணம் தாமதிக்கமாட்டார் ஹனிபா.
'என்னபுள்ள கூப்பிட்ட...'

'ஞ்சப்பாருங்க... என்னயாம் ஒங்குட அருமத்தங்கச்சி வந்நிருக்கிற... என்னத்தயாலும் கறக்கலாமெண்டு வந்நிருக்காவாக்கும்... என்னத்தயாலும் செல்லி ஆளனுப்புங்க... சரியா...'

மனைவியின் ஆணையை ஹனிபா எப்பொழுதும் தாண்டியதில்லை.
'சரி... சரி... நான் பாத்துக்கிறன்...'

ஹனிபா மீண்டும் வந்து அமர்ந்தார்.

'மறுகா... என்னடா தங்கச்சி மாலபட்டநேரம் வந்திருக்காய்... என்ன வெளக்கம்...'

முகத்தில் ஒரு விருப்பம் இல்லாமல் ஹனிபா கேட்கும் வார்த்தைகளுக்கு என்ன சொல்வதென்று புரியாமல் மௌனமாக என் மனைவி யோசித்துக் கொண்டிருந்திருக்கிறாள். 'என்னடா தங்கச்சி யோசக்கிற...'

'இல்ல காக்கா... என்ட மகன் ஸ்கூலால ட்றிப் போகப் போறானாம்... நாலாயிரம் ரூவா கேக்கான்... எனக்கிட்டயும் கைல இல்ல... நீங்கதான் பாத்து கொஞ்சம் கடனா உதவி செய்யணும்...'

ஹனிபாவின் முகம் மாறுபட்டதிலிருந்து என் மனைவிக்கிக் கொஞ்சும் சந்தேகம். அதனால்தான் தயங்கித் தயங்கிக் கேட்டிருக்கிறாள்.
'ஐசே... கொஞ்சம் லேட்டாகிட்டயே தங்கச்சி... இப்பதான் இருந்த காசையெல்லாம் குடுத்து என்ட மூத்தவளுக்கு உடுப்பு எடுத்து வந்த... அவளுக்கு நாளக்கி 'பேத் டே'. இனி அவவும் ஒரு சங்கிலி வாங்கணுமாம் நேத்தேல்லாம் புறுபுறுக்காள்... இப்ப கைல அறவே காசில்ல...'

ஹனிபாவின் வார்த்தைகள் என் மனைவிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. என் மனைவியின் கொதிக்கும் மனசைப்போல ஒரு தேனீரைக் கொண்டுவந்து விருப்பமில்லாமல் வரண்ட புன்னகையோடு ஹனிபாவின் மனைவி வைத்துவிட்டுப்போவது என் மனைவிக்கிப் புரியாமலில்லை. தேனீரை எடுத்துப் பருகமனமின்றி அவமானம் தாங்க முடியாமல் ஏமாற்றத்தோடு வீடுவந்த என் மனைவி ஒரு மாதமாக அதைச் சொல்லிச் சொல்லி வெப்பிசாரப்பட்டிருக்கிறாள்.

என் நண்பன் ஒருவனிடம் என் நிலைமையைச் சொல்லி, அவன் மனைவியின் தங்கச் சங்கிலியைக் கொடுக்க அதை ஈடு வைத்து என் மகனுக்கு நாலாயிரம் கொடுத்தேன். என் மகன் சந்தோஷத்தால் இறக்கை கட்டிப் பறந்தான். அவனுக்கென்ன தெரியும் இளங்கன்று. ஆக்கின சோற்றுக்கு கறியில்லாமல் நாங்கள் படுகின்ற துன்பம் அவன் தெரிந்திருக்க நியாயமில்லை. சுற்றுலாச் செல்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துமுடித்தான். அவனிடத்தில் இருக்கின்ற ஓரிரு ஆடைகளைக் கழுவி அதனை அயன் பண்ணவேண்டும் என்று இவன் தன்னுடைய மாமா வீட்டுக்கு அதான் ஹனிபா வீட்டுக்குச் சென்றிருக்கிறான். அவனுக்கென்ன தெரியும் கள்ளங்கபடம் தெரியாதபிள்ளை.

'மாமா... இந்த உடுப்பக் கொஞ்சம் அயன் பண்ணட்டா மாமா...'

'உடுப்பு அயன் பண்றத்துக்கு இதன்ன வண்ணாண்ட ஊடா... நீங்க அயன் பண்ணாமப் போட மாட்டிங்களோ. போங்கபோங்க அதல்லாம் இஞ்ச பண்ணேலா...'

என் மகன் முகஞ்செத்து வந்து என்னிடம் சொல்லிச்சொல்லி அழுததை நினைத்தால் இப்பொழுதும் என் நெஞ்சு கொதிக்கிறது. இப்பொழுது என் மகன் ஒரு பட்டதாரி.

இந்த ஊரில் இவனை எத்தனையோ பேர் மாப்பிள்ளை கேட்கிறார்கள். ஊரிலுள்ள போடிமாரெல்லாம் என் மகனுக்காக போட்டிபோடுகின்ற காலம் வந்துவிட்டது. இப்போதுநான் இல்லாதவன் ஏழை என்று யார் பார்க்கிறார்! ஏனென்றால் என் மகன் சேற்றில் விளைந்த செந்தாமரையாகிவிட்டானே.

போதாக்குறைக்கு பகல் அவரும் வந்தார். யார்! அவன்தான் என் மச்சினன் ஹனிபா. அவன் வசதிக்காரன் என்று காட்டுவதற்கு தன்னுடைய காறில் மனைவியோடு வந்து இறங்கினான். மச்சான் மச்சினன் என்று புதிதாக உறவுமுறை பேசினான். அவன் சுற்றிவளைக்காமலே என் மகனை தன் மகளுக்கு மாப்பிள்ளை கேட்டான். மறுகணமே என் மனம் எரிமலையாய் வெடித்தது. கோபத்தை என் மனசு கொப்பளித்தது.

'டேய் அனிவா... நீயும் ஒரு மனிசனா... ஒனக்கா என்ட மகன் மாப்புள... நீ எல்லாத்தையும் மறக்கலாம் நான் ஒண்டையும் மற்கல்ல... ஒன்னப்போல மனிசத்தன்ம இல்லாத மனச்சாட்சியில்லாத பணத்தாச புடிச்ச மிருகத்துக்கு எண்ட மகனக் குடுக்கிறத அவனச் சும்மாதிரியச் செல்லுவன்...'
என்று கதைத்த கதைகள் அவனை முள்ளாகத் தைத்திருக்கவேண்டும். உடனே ஹனிபா எழுந்து சென்றுவிட்டான்.

இருந்தாலும் நான் அவனுக்குப் பகல் அப்படிப் பேசியிருக்கக்கூடாது. அவன்தான் அப்படியென்றால்... நாமும் அப்படியா... என்னால் தாங்கமுடியவில்லை... என்னால் தூங்கவும் முடியவில்லை. வீட்டுக்கு வந்த அவனை நான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது. திரும்பிப் பார்க்கிறேன். என் மனைவி என் பின்னே நின்று கொண்டிருக்கிறாள்.

'என்னங்க... தூங்கல்லயா... பகல் நடந்தத நெனச்சிக்கி மனசப்பொட்டு கொழப்பாம வந்து படுங்க'

'இல்ல ஆயிஷா... நான் அப்பிடி அனிவாக்கு கதச்சிருக்கப்படா... நீ காலத்தால அவண்ட ஊட்டபோய் மாப்புள ஒனக்குத்தான் என்டுசெல்லு...' என்று சொன்னதும் என் மனைவி சந்தோஷத்தால் பூத்துப்போனாள்.  கரியமேகங்கள் விலகியதால் முழு நிலா பிரகாசிக்க ஒளி மழையில் இரவுக் காடாய்க் கிடந்த உலகம் குளித்துச் சிரித்தது. இப்போது என் மனதைப் போல...

                                                          (ஜே.வஹாப்தீன்)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இருள் மறைத்த நிழல்-03

மாலைவரை பொழுதை நெட்டித் தள்ளியவள், வெயில் சற்று தாழ்ந்தபின் வீட்டை சுற்றி இருந்தத் தோட்டத்தில் சிறிது நேரம் உலவினாள். பெரிய தோட்டம். காலையில் இந்த வீட்டினுள் நுழைகையில் தெரிந்த அழகு மாலை வெயிலில் பன்மடங்காய் ஒளிர்ந
்தது. பல வண்ண ரோஜாக்கள் திருப்தியாய் தலையாட்டின. சீராய் வெட்டப்பட்ட புல்வெளி பச்சை வெல்வெட்டாய் பளபளத்தது. இளங்காற்றில் சிறுகொடிகள் உடலசைத்து தாலாட்டின. குயில்களின் இசை மனதுக்கு இதம் சேர்த்தது. இருமுறை முழு தோட்டத்தையும் மெதுவாய் சுற்றி வந்தவள் தாத்தா எழுந்துவிட்டாரா என்று பார்ப்பதற்கு உள்ளே சென்றாள்.

அவர் அறையை எட்டும்போதே அவரது இருமல் சத்தம் அவளுக்கான பதிலைப் பறைசாற்றியது. ஓடிச்சென்று அருகிருந்த flask-ஐ திறந்து ஒரு கோப்பையில் வெந்நீரை ஊற்றி அவரிடம் கொடுத்தாள்.

"நன்றியம்மா " என்று நெஞ்சை நீவிக் கொண்டே அதை வாங்கிக் குடித்தார் சுந்தரம். "ஏதேனும் மாலை டிபன் சாப்பிட்டாயா அம்மா" என்று உபசரிக்கவும் செய்தார். அவரது அக்கறை இதமாக இருந்தது.

" இருக்கட்டும் தாத்தா..முதலில் நீங்கள் ஏதாவது சாப்பிடுங்கள். நானே எடுத்து வருகிறேன்" என்றவாறே எழுந்தாள்.
"இல்லையம்மா..இனி இரவு உணவு மட்டும் தான் எனக்கு. பெரும்பாலும் என் அறைக்கே தருவித்துவிடுவேன். ஆனால் இன்றைக்கு டின்னர் உன்னோடு டைனிங் டேபிளில்..சரியா?" என்று சொல்லி அன்பாய் சிரித்தார்.

கண்கள் பனிக்கத் தலையாட்டியவள் அதுவரை தினமும் தனியே என்ன செய்வார் என்று தோன்ற யோசனையாய் அவரை ஏறிட்டாள் மிதுனா.

"என்னம்மா, போரடிக்கிறதா?" என்று சுந்தரம் கேட்டார்.

விசித்திரம் தான்! அவரது தனிமைக்கு இவள் பரிதாபப்பட..அவரோ இவளது தனிமை கண்டு பரிதாபப்படுகிறார்! ஆனால் அதற்கும் ஒரு நல்ல மனம் வேண்டும். மனமுருக, "நீங்கள்..உங்களுக்கு தினமும் போரடிக்குமே என்று..போரடிக்கும்தானே தாத்தா?" என்று உண்மையான அக்கறையோடு கேட்டாள் மிதுனா.

தள்ளாத வயதில் தனிமைத் துன்பத்தை அனுதினமும் அனுபவிப்பவர் அவர். பேரனோடு தினமும் அரைமணி நேரமாவது சேர்ந்து செலவிட துடிப்பவர். பேசகூட ஆளின்றி , ஒருவரிடமும் தன் மனக்குறை பற்றி வாய் விட்டு சொல்லக்கூட வழியின்றி தவிப்பவர்.. இன்றோ வந்த ஒரு நாளிலே இந்த சின்ன பெண் தன்னைக் கண்டுகொண்டது அவர் உள்ளத்தைத் தொட்டது.

நா தழுதழுக்க , "உடம்பில் தென்பு இருந்தபோது தனியனாய் பேரனை பெற்ற பிள்ளைப் போல பாராட்டி சீராட்டி வளர்க்க முடிந்ததம்மா. இப்போது உடலும் உள்ளமும் தளர்ந்துவிட்டது. பேச்சுத் துணைக்காவது ஆள் தேடுகிறது..பணம் இருந்து என்ன செய்வது..பேரனின் வாரிசை காண உள்ளம் துடிக்கிறது.. என் ஆசைகளை காது கொடுத்து கேட்ககூட நாதியற்ற தனிமை என்னை கொல்கிறதம்மா " என்று மனம் விட்டு குமுறினார். அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

இந்த தாத்தாவோடு தினமும் சில நிமிடங்கள்கூட உட்கார்ந்து பேச முடியாமல் அப்படி என்ன வெட்டி முறிக்கிறான் இந்த நளந்தன் என்று சிறு கோபம் கூட அவளுக்கு வந்தது.

" இந்த கிழவனுக்கு ஒரு பேச்சுத்துணையாக நீயாவது இருப்பாயாம்மா" என்று அவர் கேட்கையில் நெஞ்சுருகிப் போனது. இங்கிருக்கும் மூன்று நான்கு மாதங்களில் எல்லாவிதத்திலும் இந்த தாத்தாவிற்குத் துணையாக இருக்கவேண்டும் என்று மனதுக்குள் உறுதி கொண்டாள் மிதுனா. பாவம்.. இவள் சென்றபின் மறுபடியும் இந்த பெரியவருக்கு நாலு சுவர் மட்டுமே துணை!

Atleast, இந்த நளந்தனின் மனைவி என்று ஒருத்தி வந்து இவருக்கு கொள்ளு பேரன் பேத்தி என்று பெற்றுப்போடும் வரை. ஒன்று தோன்ற,
"உங்கள் பேரனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைத்தால் இந்நேரம் ஒரு கொள்ளு பேரனோ பேத்தியோ உங்கள் மடியில் கொஞ்சிக்கொண்டிருக்குமே , தாத்தா?" என்று கேள்வியும் அல்லாது, ஆலோசனையும் அல்லாது பொதுவாக மொழிந்தாள்.

நீண்ட பெருமூச்செறிந்தவர் தன் கண் கண்ணாடியைக் கழற்றி மேலங்கியில் துடைத்தவாறே, "பிடி கொடுத்து பேச மாட்டேன் என்கிறான் அம்மா..எப்போது கேட்டாலும், வேறு ஏதாவது பேசுங்கள் தாத்தா என்று சலித்துக் கொள்கிறான். வசதியான பையன்.. அவனை சுற்றி இருப்பது காக்காய் கூட்டமாயிற்றே..பணத்திற்காக அவனைச் சுற்றி வரும் பெண்கள் ..எங்கே ஏதாவது தகுதியற்றவளிடம் மனதை விட்டு விடுவானோ என்று பதைக்கிறதம்மா. அவனுக்கும் 27 ஆகப் போகிறதே.." என்று ஒளிவுமறைவின்றி தன் மனக்குறையை கூறினார்.

27-ஆ?! தன்னை விட ஆறு வயது பெரியவனா?! அவள் ஏதோ 24 இருக்கும் என்றல்லவா நினைத்தாள்! பரவாயில்லை..உடல்கட்டை நன்றாகத்தான் வைத்திருக்கிறான்! அவனது பணத்திற்காக மட்டும் பெண்கள் அவனை சுற்றவில்லை என்பது அவள் எண்ணம். ஆனால்.. 27 வயதில் எது உண்மையான நேசம், யார் தனக்கு பொருத்தம் என்பதுகூடவா தெரியாது போகும்?

தாத்தாவின் கவலை அனாவசியமாகப்பட்டது அவளுக்கு. அதனால் தான் 'வேறு பேச' சொல்லி அவர் வாயை அடைத்துவிடுகிறான் போலும். ஓ..இன்று காலைகூட அவரிடம் அப்படித்தான ஏதோ சலிப்பாய் சொல்லிகொண்டிருந்தான். அந்த நேரத்தில் கதவில் கையை வைக்கப் போய் பாதி சாத்தியிருந்த கதவு முழுவதும் திறந்துகொள்ள.. கண்ணாலேயே அவளை சுட்டெரித்தானே!!

"ஏன் திருமணத்தை மறுக்கிறார், தாத்தா? காதல் என்று.." மேற்கொண்டு எப்படி கேட்பது என்று தெரியாமல் மிதுனா திணறினாள். 'யாகாவாராயினும் , நாகாக்க' சொன்ன திருவள்ளுவர் தாமதமாக தான் நினைவிற்கு வந்தார்! வந்த அன்றே சொந்த விஷயத்த
ில் மூக்கை நுழைக்கிறோமே..ஆனால் தாத்தாவோ மடை திறந்த நதியாய் தன் ஆற்றாமையை அப்படியே அவளிடம் கொட்டினார்.
"காதலுக்கு நான் ஒன்றும் எதிரியல்ல அம்மா. காலம் முழுமைக்கும் சேர்ந்து வாழப் போகிறவர்கள் தத்தம் துணையை தாமே தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான விஷயமே. அதற்காக விஜி யாரைக் கூட்டி வந்தாலும் 'வாம்மா' என்று கேள்வியின்றி ஏற்றுக்கொள்வேன் என்றும் அர்த்தமல்ல. ஒரு வீட்டிற்கு வரும் பெண் தன் கணவனை மட்டும் அனுசரித்துப்போனால் போதாது. அவனோடு, அவன் சுற்றத்தையும் தனதாய் பாவித்து அன்பு பாராட்ட வேண்டும். அப்படி ஒருத்தியை தான் நான் இந்த வீட்டிற்கு ஒளியேற்ற எதிர்பார்க்கிறேன். ஆனால், விஜியின் நட்பு வட்டம்..காக்கா கூட்டம். அவன் இதுவரை காதல் என்று எ..யாரையும் அழைத்து வந்ததில்லை.. அவனுக்கு ஒரு அசட்டுப் பிடிவாதம் அம்மா..எந்த விஷயமும் அவனே தான் முடிவெடுப்பான். அவன் விஷயத்தில் யாரும் குறுக்கிட்டால் அவனுக்குப் பிடிக்காது. திருமணத்திலும் நாட்டம் கிடையாது..அது.. என் மகன் செய்த வினை.. அது உனக்கு அப்புறம் சொல்கிறேன்...அப்படியே ஓருவேளை மனம் மாறி அவன் கல்யாணம் என்று ஒன்று செய்து கொள்ள முடிவெடுத்தால், அவன் மனைவியை அவனே தான் தேர்ந்தேடுப்பானாம். அதுவரை அவனை நான் அவசரப்படுத்தக்கூடாதாம். எனக்கென்னவோ அவன்..அவனுக்குள் சமீபமாக ஒரு சலனம் ஏற்பட்டிருக்கிறது என்று ஒரு சந்தேகம்..ஹ்ம்ம்..பார்க்கலாம்..நாம் ஒன்று நினைக்க, தெய்வமும் அதையே நினைத்தால் நல்லது."

ஓ.. இந்த கடுவன் பூனைக்குக் கூட காதல் வருமா?!

"ஏதோ ஒரு பெண்ணின் வலையில் விழுந்துவிட்டான் என்று சந்தேகம் அம்மா.. என்னடா..சொந்த பேரன் பற்றி இன்று வந்த உன்னிடம் புரணி பேசுகிறேன் என்று பார்க்கிறாயாம்மா? நீ..உன்னை மூன்றாம் மனுஷியாக நினைக்க முடியவில்லை தாயே.. சந்தானம் என் உயிர் நண்பன். நீ அவனுக்கு மட்டும் அல்ல, எனக்கும் சொந்த பேத்தி போலதான். உன் அம்மா என்னை, பெற்ற தந்தை போல பார்த்துக்கொள்வாள் அம்மா . உன்னிடமும் அவள் சாயல். அதே கனிவு, பரிவு, பாசம் எல்லாம்.. ஒரு குடும்பம் போல வாழ்ந்தோம்..பிரிந்த குடும்பம் இன்றாவது ஒன்று சேர்ந்ததே..சந்தானம் தான் கூட இருந்து பார்க்க.." தொண்டை அடைக்க கண்களைத் துடைத்துக் கொண்டார் பெரியவர்.

"இன்னும் மூன்று நான்கு மாதங்களில் அவரும் தான் வந்துவிடுவாரே, தாத்தா.. வருத்தப்படாதீர்கள் " என்ற அவளது தேறுதல் அவரைத் தேற்றுவதற்கு பதிலாய் மேலும் உணர்ச்சிவசப்பட வைத்தது. "ஆமாம், ஆமாம். வந்துவிடுவான் தான். வரத்தான் வேண்டும்" என்று தனக்குள் முனகிக்கொண்டார்.

பேரனில் லயித்த மனம் மெதுவாய் பால்ய சிநேகிதனிடம் ஒன்றியது கண்ட மிதுனா தானும் தன் பாட்டனின் நினைவில் மூழ்கிப் போனாள்.
 
இத்தனை ஆழ் நட்பு என்று தாத்தா சொல்லவேயில்லையே. ஆனால் திரும்பி திரும்பி சுந்தரம் தான் உனக்கு எல்லாம். அவன் சொல்படி நடந்து கொள்ளடா என்று பலமுறை சொன்னார்தான். அதெல்லாம் விருந்தினர் மனம் கோணாது சொல்பேச்சு கேட்டு சாமர்த
்தியமாக இருக்க சொல்கிறார் தாத்தா என்றே அவள் பொருள் கொண்டிருந்தாள்.

கடந்த சில மாதங்களாக, தசைப் பிடிப்புத் தொந்தரவு அதிகமாகிவிடவே வலியால் படும் அவஸ்தைகளால் அவர் அதிகம் பேசுவதும் இல்லைதான். எல்லாம் ரத்தின சுருக்கங்கள்தான். விட்டத்தை வெறித்த பார்வை..அல்லது வலியால் நெற்றி சுருக்கிய பார்வை - இதுதான் அவள் தாத்தாவின் சமீபத்திய தோற்றம் ஆகிப்போனது.

தசைப் பிடிப்பை வைத்துக்கொண்டு காசியாத்திரையா என்று அவள் கலங்கியபோது, "நான் தனியாக செல்லவில்லை பாப்பா..என் நெருங்கிய சிநேகிதன் சுகவனத்தோடு தான் செல்கிறேன். பார், அவன் பையன் கூட ஒரு டாக்டர் தான். வேண்டிய மருந்து, மாத்திரை, மருத்துவ ஆலோசனை எல்லாம் எடுத்துக்கொண்டு துணையோடு தானே..சுகவனத்திற்கு நான் துணை..எனக்கு அவன் துணை.. எனது நீண்ட நாள் ஆசையும் கூட..இதுபோல எல்லாம் அமைந்து வருவது அரிது பாப்பா.. சுந்தரம் வீட்டில் நீ பாதுகாப்பாய் இருப்பாய் என்ற எண்ணமே என் பயணத்தை இன்னும் சுலபமாக்கும்.." என்று பலதும் சொல்லி அவள் மனதைக் கரைத்தார்.

டாக்டர் ஆலோசனை, தக்க துணை..என்று சில விஷயங்களும்,. அத்தோடு தாத்தாவின் ஆசை என்ற முத்தாய்ப்பும் அவள் வாயைக் கட்டிப்போட்டன. அவ்வப்போது நல விவரம் கடிதம், தொலைபேசி மூலம் தெரிவிக்கவேண்டும் என்ற உறுதிக்குப் பின்னரே அவள் ஒருவாறு சம்மதித்தாள். அதன்படி முதலில் அவள் சுந்தரம் தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டாள். தாத்தாவை அவள் கிளம்பிய அன்றே சுகவனத்தின் பையன் சுகந்தன் அவர்கள் வீட்டிற்கு அழைத்துசெல்வதாக ஏற்பாடு. கிளம்பும் பரபரப்பில் டாக்டர் வீட்டு போன் நம்பரை எங்கோ தவறவிட்டுவிட்டது அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

இப்போதேனும் தாத்தாவிடம் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். "வந்து..தாத்தா..அந்த உங்கள் நண்பர் சுகவனத்தின் போன் நம்பர் இருக்கிறதா?.." என்று நப்பாசையுடன் கேட்டாள். தன் தாத்தாவின் நெருங்கிய நண்பர் இந்த தாத்தாவிற்கும் தெரிந்தவராக இருக்க வேண்டுமே என்று உள்ளம் தவித்தது. நல்லவேளை அவள் யூகம் வீண் போகவில்லை.

"இருக்கிறதம்மா..நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். பள்ளி..தொழில் எல்லாவற்றிலும்..மும்மூர்த்திகள் என்று பிறர் கேலி செய்யும் அளவிற்கு..." பழைய நினைவுகளில் அமிழ்ந்தவர் தானே தொடர்ந்து, "நானும் சுகமும் தான் உன் தாத்தாவை ரொம்ப சமாதானப்படுத்தி இந்த..ஏற்பாட்டிற்கு படிய வைத்தோம். அவனுக்கு உன்னைப்பற்றி தான் ஒரே கவலை.. இப்படி உன்னை நி..விட்டு போகிறோமே என்று.." தொண்டையை கனைத்து சரிபடுதத்திக்கொண்டு , "இங்கே என் பாதுகாப்பில் நீ இருப்பது என்று முடிவான பின்தான் எங்கள் யோசனையை காது கொடுத்து கேட்டான். நீ பத்திரமாக இங்கு வந்து சேர்ந்ததை காலையிலேயே சுகத்திற்கு தெரியப்படுத்திவிட்டேனம்மா. உன் தாத்தா தூங்கி கொண்டு..வந்து அவன் எழுந்ததும் போன் பண்ணுவதாக சுகம் சொன்னான். போன் வந்ததும் உன்னை கூப்பிடுகிறேன் சரியா?" என்றார்.

வாய் "சரி தாத்தா" என்றாலும் அவள் மனம் சமாதானம் அடையவில்லை. தாத்தா இந்நேரம் அங்கே ஏன் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்? அவள் கிளம்பிய அன்று மதியமே டாக்டர் வீட்டில் இருந்து காசிக்கு செல்வதாகத்தானே திட்டம்? இவர் சொல்வதைப் பார்த்தால் இன்று மாலை வரை டாக்டர் வீட்டில் தானா? தாத்தாவிடம் பேச வேண்டும் போல உள்ளம் பரபரத்தது.

அதைப் புரிந்து கொண்ட பெரியவர், "ஒரு கம்ப்ளீட் செக்கப் முடித்த பிறகு இருவரும் பயணத்தை தொடரலாம் என்று சுகந்தன் கண்டிப்பாக சொல்லிவிட்டானாம் அம்மா. அதுதான் உன் தாத்தா அங்கேயே தங்க வேண்டியதாகிவிட்டது. " என்றார் சமாதானமாக. அதுவும் சரியாகேப் பட்டது மிதுனாவுக்கு. வருமுன் காப்பது நல்லதல்லவா? ஆனால் இதை ஏன் அவர்கள் முன்பே யோசிக்கவில்லை? மேலும், பயணம் தாமதமானால், அது முடிவுறவும் தாமதம் ஆகும் தானே.. அதுவரை இவள் இங்கல்லவா இருக்க வேண்டும்?!

"ஏனம்மா, என்னோடு கூடுதலாய் மேலும் சில நாட்கள் இருப்பதில் உனக்கொன்றும் சிரமம் இல்லையே? " என்று வினவினார் சுந்தரம்.

"ஐயையோ..அதெல்லாம் ஒன்றும் இல்லை தாத்தா..வந்து..தாத்தாவைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்று தான்.." அவள் திணறினாள். "புரிகிறதம்மா..உனக்கு இங்கே ஒரு குறையும் இல்லாது கவனித்து கொள்வது என் கடமை.உன் தாத்தன் இல்லாத குறை தவிர" என்ற அவரது குரல் ஏனோ உடைந்து தழுதழுத்தது.

இவர் ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுகிறார்? தாத்தா காசிக்கு தானே செல்கிறார்? மூன்று மாதங்களில் வந்துவிடப்போகிறார்..ஒருவேளை தன்னைப் போலவே இவரும் தன் சிநேகிதனை எண்ணி ஏங்குகிறார் போல.. தன் தாத்தாகூட இப்படித் தான் சமீப காலமாக அடிக்கடி உணர்ச்சிவசபட்டது நினைவிற்கு வந்தது. பாவம் இவருக்கும் அதேத் தள்ளாத வயது தானே..தனிமை வேறு.. ஆனாலும் இந்த நளந்தன் காலில் வெந்நீரை ஊற்றிக்கொண்டு வெளியே வெளியே என்று ஓடாமல் இவரோடு அனுசரணையாக நாலு வார்த்தை தினமும் பேசலாமே என்று அவளுக்கு தோன்றியது.
 
பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரவு உணவு வேலையும் வந்தது. ஆனால் நளந்தன் வரவில்லை. முகம் வாடிய பெரியவர், "அவன் ஏதாவது பார்ட்டி, கீர்ட்டி என்று போயிருப்பானம்மா. அவனுக்காகக் காத்திருந்தால் உடம்பை கெடு
த்துக் கொள்கிறேன் என்று அதற்கும் குதியாய் குதிப்பான். யாருக்காக உடம்பைப் பார்த்துக்கொள்ளவேண்டும்? ச்சு..என்னவோ இன்றைக்கு நீ இருக்கிறாய்.. நாம் சாப்பிடலாம் வா " என்று மனம் நோக சொன்னவர், அவளை டைனிங் டேபிளுக்கு அழைத்து போய் 'இதை சாப்பிடு, இன்னும் சாப்பிடு, இதைக் குடி, அதை குடி' என்று பார்த்து பார்த்து அவளை உண்ண வைத்தார். புது இடத்தில், சங்கோஜத்தில் அவள் ஒழுங்காக சாப்பிடுவாளோ மாட்டாளோ என்ற கனிவு..பால்ய சிநேகிதர் பேத்தியிடம் இத்தனை ஈடுபாடா? பாசத்திற்கு ஏங்குகிறார் மனிதர்! நெகிழ்ந்து போனாள் மிதுனா.

இரவு தன்னறைக்குச் சென்று கதவடைக்க போனபோது தான், 'இந்த கதவு சரியாக சாத்தாதே' என்று நினைவிற்கு வந்தது. இந்த ராத்திரியில் தாத்தாவிடமோ, வேலை ஆட்களிடமோ தொந்தரவு செய்வதும் சரியாகாது..சரி..முடிந்தவரை கதவை சாத்திவிட்டு படுத்துக் கொள்ள வேண்டியதுதான். எப்படியும் இவள இந்த அறையில் தங்குவது அந்த நளந்தனுக்குத் தெரியும். காலை போல தன்னிச்சையாக கதவை அவன் திறக்க மாட்டான். கோபக்காரன் என்றாலும் கண்ணியமானவன்..அவள் நிலை கண்டு, அப்படி நொடியில் திரும்பி நின்றுகொண்டானே !. வேலை ஆட்களும் அனுமதி கேட்டு தான் உள்ளே வருவார்கள்.. எனவே பாதுகாப்புப்பற்றி கவலை இல்லை என்றே தோன்றியது அவளுக்கு. உடை மாற்றுவதை மட்டும் இனி குளியல் அறையிலேயே முடித்துவிட வேண்டும்..குறைந்தபட்சம் தாத்தாவிடம் சொல்லி தாழ்ப்பாளை சரி செய்யும்வரை.

குளியலறையும் ரொம்பப் பெரியதுதான்.உள்ளே தனி வார்ட்ரோபு கூட இருந்தது. ஆளுயர கண்ணாடி பொருத்தப்பட்ட sliding door-உடன். Shover-கு ஒரு சதுரம், அதை அடுத்து ஒரு பாத் டப், சின்ன அரைகதவுக்கு அப்பால் ஒரு toilet. தாராளமாக உள்ளேயே உடை மாற்றலாம்.

முடிவு செய்தது போன்றே கதவை நெட்டித் தள்ளி இயன்றவரை அடைத்துவிட்டு ஒரு நைட்டியை எடுத்து கொண்டு குளியலறையில் மாற்றிக்கொண்டாள். அந்த டபிள் குஷன் கட்டிலில் அமர்ந்து ஒரு நிமிடம் இறைவனை தியானித்து அங்கிருந்த Comforter-ஐ கழுத்துவரை இழுத்து போர்த்திக் கொண்டு சுந்தரம் தாத்தாவிடம் பேசியவற்றை அசைபோட்டவாறு உறங்கியும் போனாள்.
 


                                               By:K.Lankesh
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இருள் மறைத்த நிழல் -02

தாத்தா வரும்வரை இங்கே தங்கி வேலைக்கும் போய் வர வேண்டியது..அவர் வந்தவுடன், அலுவலகத்திற்கு அருகாக சக்திக்கு தகுந்த அளவில் ஒரு வீடு பார்த்துக்கொண்டு அவரோடு மரியாதையாக இங்கிருந்து நகர்ந்து விடவேண்டும் என்று முடிவு செய்த பின்தான் மனம் லேசானது. ஏனோ அந்த 'சின்ன அய்யா'வின் - சின்ன அய்யாவா? சிடுசிடு அய்யா என்றால் பொருத்தமாக இருக்கும் - அந்த அவனின் புண்ணியத்தால் வந்த ஒரு மணி நேரத்திலேயே தன்னை 'அழையா விருந்தாளியாக' உணரத் தொடங்கியிருந்தாள் மிதுனா.

" சுந்தரமும் அவன் பேரனும் தான் அம்மா அந்த வீட்டில் " என்று தன் தாத்தா சொன்னாரே..அப்போதெல்லாம்.. அது ஒரு பொருட்டாக அவளுக்குப படவில்லை. இப்போதோ, அந்த பேரனின் ஏளன பார்வையும், கடுமையும் நெஞ்சில் நெருட..இவனோடு ஒரே வீட்டிலா என்றிருந்தது. அதே வீட்டிலேயே அவனும் இருந்தாலும், எது வேண்டும் என்றாலும் அந்த முத்துவை வரந்தாவிலோ தோட்டத்திலோ தேடி சென்று கேள் என்று அவன் சொன்னது, 'இனி என்னை தொந்தரவு செய்யாதே' என்று சொல்லாமல் சொல்லியதாக அவளுக்கு உறுத்தியது. சரியான முசுடு! பெரிய மன்மதன் என்று நினைப்பு! வாய் முனுமுனுக்கையிலே மனம் 'மன்மதனே தான்' என்று இடைசெருகியது!

மன்மதனோ அன்றி வெறும் மனிதனோ! ஓரிரு மாதங்களில் ஜாகையை மாற்றிக்கொண்டு நடையைக் கட்ட போகிறாள். அதுவரை இவன் கண்ணில் படாமல் ஒதுங்கி கொள்ள வேண்டும்.அவ்வளவே! அவன் தாத்தா நல்ல மாதிரியாகத்தான் தெரிகிறார். உடல் ஒத்துழைத்திருந்தால் இன்னும் கூட நன்றாக அப்போதே பேசியிருப்பார். அவரது களைத்த தோற்றம் நினைவில் வந்தது. பாவம் பெரியவர். அவருக்கு போய் இப்படி ஒரு முசுட்டு பேரன்! அவரிடம் கூட சிரிப்பானோ என்னவோ?! அவள் உள்ளே நுழைகையில் கூட 'வேறு பேச' சொல்லி சலிப்பாகதானே சொன்னான்!

எண்ணம் அவனையே சுற்றி சுற்றி வர, சே! முதலில் சுந்தரம் தாத்தா கூறியது போல ஒரு குளியலாவது போட்டால் தான் புத்தி உருப்படியாக யோசிக்கும் என்று மிதுனாவுக்கு தோன்றியது. ஆனால் அந்த attached bathroom-ல் குளிக்கும் போதும், 'அப்படி அவனுக்கு சலிப்பூட்டுமாறு என்னத்தைதான் இந்த தாத்தா பேசியிருப்பார் ?!' என்று அவள் குரங்கு மனம் அவனிலேயே நின்று குறுகுறுத்தது.
பல பல எண்ணங்கள்..கை தன் பாட்டில் சோப்பு போட அலுப்பு தீர குளித்து முடித்தாள் மிதுனா. கையோடு பாத்ரூமிற்கு கொண்டுசென்றிருந்த சுடிதாரை அணிய முற்படுகையில் தான் இந்த வீட்டில் சுடிதார் அனுமதிக்கப்பட்ட உடை தானா? என்று ஒரு சிறு சஞ்சலம் ஏற்பட்டது. இந்த காலத்தில் சுடிதார் தேசிய உடையே ஆகிவிட்டது தான். ஆனால் அவள் தாத்தாவிற்கு என்னவோ அதில் அவ்வளவு பிடித்தம் இல்லை. பேத்திக்காக, கொஞ்சம் விட்டுக்கொடுத்தவர், சேலையின் மகத்துவம் பற்றி அவ்வப்போது சொல்லி, மறைமுகமாய் சுடிதாரை - சுடிதார் என்று இல்லை - சேலை அல்லாத எல்லா உடைகளையும் சாடுவார். அதனால் பெரும்பாலும் வெளியே செல்கையில் அவள் சேலை தான் உடுத்துவது.

இந்த சுந்தரம் தாத்தாவும், தன் பாட்டனை போன்றே சேலையே உன்னதம் என்று நினைப்பவராக இருந்து விட்டால்? வரும் போது சேலையில் தான் வந்திருந்தாள். வந்தவுடன் வேலைபற்றி வேறு பேச வேண்டுமே..சேலையில் கொஞ்சம் பெரிய பெண்ணாய் பொறுப்பாய் தெரிவோமே என்று ஒரு எண்ணம். இப்போது ஏதோ நினைப்பில் சுடிதார் அணிந்து..கீழே இருந்த பெரியவர் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே அவர் பேரனிடம் நல்ல சுமுகம் இல்லை.. வேண்டாம்..சேலையே கட்டிக்கொள்வோம் என மிதுனா தீர்மானித்தாள்.

கையில் இருந்த சுடிதாரை அணியாமல், துவட்டிய டவலையே உடலுக்கு குறுக்காக சுற்றிக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவள், கட்டில் மேல் திறந்திருந்த தன் suitcase-ல் மேலாக கிடந்த ஒரு சேலையையும், அதற்குண்டான பாவாடை, சட்டையையும் எடுத்து அணிய முற்பட்டாள். சேலைக்கு முன் கொசுவம் வைத்துக்கொண்டிருந்த போது, சற்றும் எதிர்பாராதவிதமாக கதவு திறந்துக்கொண்டது. ஒரு சின்ன அலறலுடன் கொசுவத்தை தவறவிட்டு பின் தரையில் கிடந்த முந்தானையை கொத்தாக அள்ளி அவசரமாய் தன் மேல் போட்டுக்கொண்டவள், அங்கே அதே திடுக்கிடலுடன் அவன் - அவளிடம் அப்படி சிடுசிடுத்தவன் நிற்பதை கண்டதும், அவனுக்கு முதுகு காட்டி திரும்பிக்கொண்டு, "என்ன? என்ன வேண்டும்?" என்று தன் முறையாய் குரலின் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு சிடுசிடுத்தாள்.

அவளை அந்த கோலத்தில் கண்டதும் சற்று தடுமாறிய அவனும் கணநேரத்தில் தன்னை சமாளித்துக்கொண்டான். பார்வையில் தென்பட்ட பிரமிப்பை மறைத்துக்கொண்டு, "சே!" என்று அவளுக்கு எதிர் புறமாக திரும்பி தலையை கோதிக்கொண்டே,
"கதவைத் தட்ட தான் தெரியாது! உடை மாற்றும்போது, கதவைத் தாளிட வேண்டும் என்று கூடவா தெரியாது?!" என அவளையே குற்றம் சாட்டினான்!
அவனது இந்த அநியாய குற்றச்சாட்டில் அதிர்ந்து போனாள் மிதுனா. Auto lock கதவு என்று நினைத்தாளே?! அவனுக்கு எதிர்புறம் திரும்பிகொண்டே, முந்தானையை சரியாக தன் மேல் சரித்துக்கொண்டவள், அவனுக்கு இணையான கோபத்துடன், "நீங்கள் தான் எல்லா 'basic manners'-ம் தெரிந்தவர் ஆயிற்றே! கதவை தட்டி விட்டு வருவதற்கென்ன?!" என்று பதிலடி கொடுக்க முனைகையில், அவனோ அதற்குள், "முத்து முட்டாள்!" என்றபடியே இரண்டிரண்டு படிகளாய் தாவி கீழிறங்கிவிட்டிருந்தான். சாத்திய கதவைத் தட்டாமல் இவன் அநாகரீகமாய் திறந்ததற்கு முத்து எப்படி முட்டாளாவான்? யார் மீதாவது வீண் பழி போடுவதே இவன் வழக்கமா?!

அவன் தயவில் அவன் வீட்டில் வாழ வேண்டிய தன் நிலை மீது கோபம் மிக, வேகமாக கதவை சாத்தினாள் மிதுனா. எல்லா கூத்திற்கும் காரணமான கதவு சரியாக lock-ஆகாததை அப்போதுதான் கவனித்தாள். "சே!" இதைக் கூட கவனிக்காமல் புது இடத்தில் சாவகாசமாக உடை மாற்றிக்கொண்டு..அவன் கோபத்திலும் ஒரு நியாயம் இருப்பது இந்த நேரத்தில் புரிவது அநியாயமாகப்பட்டது அவளுக்கு. நல்லவேளை சற்று தாமதமாக வந்தான். ஒரு ஓரிரு நிமிடங்கள் முன்னதாக வந்திருந்தான் என்றால்...சீசீ..அவன் முகத்தை எப்படி பார்ப்பாள் அவள்!

அவனைக் காண விருப்பமில்லாமல், ஜன்னலையும் சாத்த முற்படுகையில், கீழே முத்துவும் அவனும் பேசுவது கேட்டது. "பெரியய்யா தானுங்க மேல ஏற்பாடு செய்ய சொன்னாரு. நீங்க கூட அவர கேட்டு செய்ய சொன்னீங்களே..அதான் சின்னய்யா.." என்று பவ்யமாக விளக்கம் கூறிக்கொண்டு இருந்தான்.

ஓ அது தான் முத்துவின் குழப்பத்திற்கு காரணமோ?! இந்த சின்ன எஜமான் கீழறை என்று சொல்ல, பெரிய எஜமான் ஏற்கெனவே மேலறை என்று சொல்லிருப்பார். இந்த அறையில் அவள் இருப்பது தெரியாமல் இந்த கடுவன் பூனையும் கதவை டக்-கென திறந்துவிட்டான் போலும்.. இந்த லட்சணத்தில் தான் வேறு "என்னைச் சொன்னீர்களே, நீங்களாவது கதவைத் தட்டிவிட்டு வந்திருக்கலாமே? " என்று தர்க்கம் செய்யத் துணிந்தாளே! நல்லவேளை அதற்குள் அவன் அங்கிருந்து முத்துவைத் தேடி அகன்றுவிட, மேலும் மூக்குடையாமல் தப்பித்தாள்!

இந்த கலாட்டா எல்லாம் ஓயட்டும் என்று ஒரு அரை மணி நேரம் காத்திருந்தாள் மிதுனா. பசி வயிற்றைக் கிள்ளியது. கீழே அவனிருப்பானோ என்றும் கூச்சமாக இருந்தது. கணநேரமானாலும் அவன் பார்வையில் தென்பட்ட மாறுதலை அவள் கவனித்துவிட்டிருந்தாளே!

கீழே எதுவும் பேச்சுக் குரல் கேட்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்ட பின் மெல்ல தாத்தாவின் அறைக்கு சென்றாள்.

கீழ்த்தளம் ஆள் அரவமின்றி இருந்தது. நல்லவேளை தாத்தா தன் குட்டி தூக்கத்தை முடித்துவிட்டிருந்தார். அறை வாயிலில் அவள் தயங்கி நிற்பதை பார்த்தவர் முகம் மலர, "வாம்மா, குளித்தாயிற்றா? அறை வசதியாக இருக்கிறதா?" என்று அக்கறையாக விசாரித்தார்.

"ஆயிற்று தாத்தா. அறையும் வசதியாக..மிக வசதியாக இருக்கிறது" என்று தானும் முகமலர்ந்து உரைத்தாள் மிதுனா.

"ரொம்ப சந்தோஷம், அம்மா. விஜி முன்பு உபயோகப்படுத்தியது. அடுத்த அறையை விரிவுபடுத்தி அதற்கு மாறியபின் இந்த அறை உபயோகத்தில் இல்லை. விஜியுடையது என்பதால் சகல வசதிகளும் இருக்கும். அதனால் தான் அந்த அறையையே உனக்கு ஒதுக்கி தர சொல்லிருந்தேன்" என்றார்.

வாய்க்கு வாய் 'விஜி', 'விஜி' என்கிறாரே.. யாராய் இருக்கும்? இவருக்கு ஒரே ஒரு பேரன் மட்டும் தான் என்று தாத்தா கூட சொன்னாரே..ஒரு வேலை ஆண் வாரிசு வகையில் இவன் ஒருவன் மட்டும் என்றிருப்பாரோ.. பார்த்தால் பேத்தியும் இருக்கிறாள் போல! திருமணமாகி இருக்குமோ? தன் தாத்தாவிடம் இந்த விஷயமாவது உருப்படியாக கேட்டு வந்திருக்கலாம் என்று காலம் கடந்து தோன்றியது மிதுனாவுக்கு.
"உன் தாத்தாவும் இங்கிருந்தால் நன்றாக இருக்கும் அம்மா" நீண்ட பெருமூச்சுவிட்டார் பெரியவர். அவள் தாத்தா அவளோடு இருந்திருந்தால் அவள் எதற்கு இங்கே வர போகிறாளாம் என்று மிதுனா நினைத்தாலும் அதை சொல்லாமல் விடுத்தாள்.

"என்..எங்களால் உங்களுக்கு தொந்தரவு...தாத்தா" அவள் முடிக்குமுன், "இல்லம்மா..இல்லை..நீ வந்திருப்பது எனக்கு ஒருவகை ஆறுதல் தாயே..தனிமையோடு போராடித் தவிக்கும் கிழவன் நான். சந்தானத்திடம் எவ்வளவோ எடுத்து சொல்லித்தான் உன்னை இங்கே அனுப்பி வைக்க சம்மதித்தான். உன் வருகை நான் விரும்பி கேட்ட வேண்டுகோள் தானம்மா. தொந்தரவே அல்ல " என்று உணர்ச்சி பொங்க கூறி அவளைத் திகைக்க வைத்தார் பெரியவர்.
தாத்தா இதையெல்லாம் சொல்லவேயில்லையே.. விடுதிப் பேச்செடுத்ததுமே அவள் வாயை அடைத்தவர், அடுத்த நாள் திடுமென, "சுந்தரம் என் உயிர் நண்பன். உன்னை தன் சொந்த பேத்தி போல பார்த்துக் கொள்வான்" என்று மட்டும்தான் இரத்தின சுருக்கமாகக் கூறினார். அதுசரி! கடந்த ஆறேழு மாதங்களாகவே தாத்தா பேசுவது வெகுவாக குறைந்து போயிற்றே! எப்போதும் ஒரு கவலை..என்னவென்று வாய் விட்டு சொன்னால்தானே?! 'என்ன தாத்தா' என்று தன்னை மீறி எப்போதாவது கேட்டால்.. ஆதரவாய் அவள் தலையை வருடுவார். கம்மிய குரலில் சில சமயம் 'உனக்கு ஒரு வழி செய்யாமல்.. செய்ய வேண்டும்.." என்று கோர்வையின்றி தடுமாறுவார். அவர் அப்படித் துன்புறுவதை காண, கேட்க சகியாமல் அவளும் மேற்கொண்டு எதுவும் துருவ மாட்டாள். தாத்தாவைப் பார்க்க வேண்டும் போல ஏக்கமாக இருந்தது அவளுக்கு.

அதைக் கண்டு கொண்ட பெரியவரும், பேச்சை திசை திருப்ப எண்ணி, "சரி வாம்மா, பேசிக்கொண்டே சாப்பிடலாம்" என்று கூறி அவள் தொடர்வாள் என்ற நம்பிக்கையோடு அவர் பாட்டில் டைனிங் டேபிளுக்கு சென்று அமர்ந்தார். அவரது கடுவன் பூனை பேரனும் வருவானோ?! அவன் வராவிட்டால் பரவாயில்லை என்றிருந்தது அவளுக்கு. அந்த 'விஜி'யும் வருவாளா? யாரையும் கண்ணில் காணோமே..பேரன் தான் சிடுமூஞ்சி..அந்த பேத்தியாவது அவள் வயதை ஒத்தவளாய் இருந்து, அவளோடு சிநேகம் பாராட்டினால் நன்றாக இருக்குமே. அந்த விஜியை பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட, சுற்றி வளைத்து, "வந்து.. இருக்கட்டும் தாத்தா..வி..விஜியும் வநதுவிடட்டுமே..விஜியோடே சேர்ந்தே சாப்பிடலாம்.." இழுத்தாள்.

அந்த விஜி இன்னும் இந்த வீட்டில் தான் இருக்கிறாளா..என்று மறைமுகமாக அறிந்துகொள்ளும் முயற்சியாம்! தன் சாமர்த்தியத்தை மனதுக்குள் மெச்சியவள் அழுத்தமான காலடி ஓசை கேட்கவும் பேச்சை நிறுத்தி மாடிப்படிகளை ஏறிட்டாள். ஒற்றை புருவத்தை மேலே ஏற்றி அவளை ஏளனமாய் பார்த்தபடி, மடிப்பு கலையாத சட்டையின் கைகளை முழங்கைவரை மடித்துவிட்டவாறு படிகளில் கம்பீரமாக இறங்கி டைனிங் டேபிளை நோக்கி வந்து கொண்டிருந்தான் அவன் - அந்த பேரன்!

"இப்போது என்ன தவறாக சொல்லிவிட்டேனாம்?! வீட்டு மனிதர்கள் வந்தபின் எல்லாருமாக சாப்பிடலாம் என்று சொன்னதில் என்ன பெரிய தவறை கண்டுபிடித்துவிட்டானாம்?! அவனது trademark ஏளனப் பார்வைக்கு பதிலடியாய் அவள் இதழ்களில் தோன்றிய இகழ்ச்சி, தாத்தா அவனைக் காட்டி, "இதோ விஜியே வந்தாச்சே! " என்றதும் தோன்றிய வேகத்திலேயே மறைந்தது!
கடவுளே! இவன் பெயர்தான் விஜியா?! முன்பின் தெரியாதவன்..அதுவும் சில மணிகளுக்கு முன் நடந்த அந்த சேலை சம்பவத்திற்குப்பின் .. எதுவுமே நிகழாதது போல..உரிமையோடு அவன் பேரை வேறு சுருக்கி..விஜி வரட்டும்..விஜியோடு சாப்பிடலாம்..என்று வெட்கமில்லாமல்...சீசீ..பின் அவன் ஏன் அவளை அப்படி ஏளனமாய் பார்க்கமாட்டான்?! ஏன்தான் இவன் பார்வையில் தான் இப்படித் தாழ்ந்துகொண்டே போகிறேனோ என்று கழிவிரக்கம் பொங்கியது மிதுனாவுக்கு.

சமாளித்துக்கொண்டு, இந்த ஒன்றிலாவது தன்னை சீர் செய்துகொள்ள நினைத்து, "நான்..வி..விஜி என்றால் உங்கள் பேத்தி என்று நினைத்தேன் தாத்தா.." என அழாக்குறையாக சொல்லி முடித்தாள். அவள் ஏதோ பெரிய Joke சொன்னது போல வாய் விட்டு சிரித்தார் தாத்தா. அந்த விஜி அவளை ஒரு தரம் கூர்ந்து நோக்கியதோடு சரி.

"பேத்தியா?!.. நல்லா நினைத்தாயம்மா. ஆளுயரம் ஆணழகனாய் நிற்கும் என் பேரனை.." என்று மீண்டும் சிரித்தவர், "இவன் பெயர் விஜய நளந்தன், அம்மா. நான் விஜி என்றுதான் அழைப்பது." என்றார்.
அதை அறிமுகமாக ஏற்று அவனைப் பார்க்க அவளுக்குத் துணிவில்லை. அவனும் அதை எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. அவளது விளக்கத்தை அவன் ஏற்றுக்கொண்டானோ இல்லையோ ஆனால் மறுக்கவுமில்லை. தாத்தாவிடம் மட்டும் பொதுப் பேச்சு பேசிவிட்டு விரைவாகவே உணவையும் முடித்துக் கொண்டு, "நான் அவசரமாக வெளியே செல்ல வேண்டும். Excuse me " என்றுப் பொதுப்படையாக விடைபெற்றுச் சென்றான்.

இருள் மறைத்த நிழல் - 6
நளந்தன் சென்றபின் சிறிது நேரம் தாத்தா அவளோடு பேசிக் கொண்டிருந்தார். பேச்சு அவள் தாத்தாவைப் பற்றியதாகவே இருந்தது. "உனக்கு இங்கே என்ன வேண்டும் என்றாலும் தயங்காமல் என்னிடம் கேளம்மா" என்ற அவரது அன்பான குரல் தன் தாத்தாவில் மூழ்கி கிடந்த அவள் நினைவுகளை மீட்டு வந்தது. இருக்க இடம், பெரியவரின் பாதுகாப்பு..இன்னும் என்ன வேண்டும்?..இருக்கிறதே..பிறர் கையை எதிர்பார்க்காது வாழ வகை செய்யும் வேலை..அதுவும் வேண்டுமே..

அவளது எண்ணத்தைப் படித்தவர் போல சுந்தரமே அந்த பேச்சையும் எடுத்தார். "உனக்கொரு வேலைத் தேடித் தருமாறு சந்தானம் கேட்டானம்மா. என் பேத்தி போல உரிமையோடே இங்கிருக்கலாம் நீ. ஆனால் அவனுக்கு உன் கையில் ஒரு வேலை இருக்க வேண்டும் என்று..சரி..அதுவும் சரிதான். ஆயிரம் இருந்தாலும் சுயசம்பாத்தியம் ஒரு பாதுகாப்புதான். உன் படிப்பையும் பாழடிக்கக்கூடாது தான்." என்று சொல்லி மூச்சு வாங்கியவர் வினாடி தாமதத்திற்குப்பின் விட்ட இடத்தில் தொடர்ந்தார்.

"ஒரு சில வாரங்கள் பொறுத்துக் கொள்ளம்மா. விஜியின் வெளியூர் பயணமெல்லாம் முடிந்ததும் அவனிடம் சொல்லி உன் வேலைக்கும் ஏற்பாடு செய்கிறேன். அதற்குள் உனக்கும் இந்த இடம், மனிதர்கள், ஊர் எல்லாம் பழகி விடும்" என்றார்.

இதற்கும் அந்த நளந்தனிடம் தான் போய் நிற்க வேண்டுமா என மனம் சோர்ந்தது. இருப்பினும் மனதை மறைத்தபடி மென் புன்னகையோடு "சரி தாத்தா. அது வரை வீட்டில் ஏதாவது வேலை சொல்லுங்கள். உங்களுக்கு உதவியாக ஏதாவது செய்கிறேனே..சும்மா இருக்க எனக்கும் போரடிக்கும் " என்றாள்.

என்னதான் தன் தாத்தாவும் இவரும் உயிர் நண்பர்கள் என்றாலும், தன்னை சொந்த பேத்தி போல என்று இவரே சொன்னாலும்..ஓசியில் சோம்பேறியாய் அங்கே ஒட்டிக்கொள்ள அவளுக்குப் பிடித்தம் இல்லை. இந்த பெரியவர் கூறியது போல தன் தாத்தாவோடு இங்கே ஓரிரு நாட்கள் விருந்தாட வந்திருந்தால் அது ஒரு மாதிரி. தானோ கிட்டத்தட்ட பிழைப்பிற்கு வழி தேடி வந்தவள். தன் சுயகௌரவத்திற்கு பங்கமின்றி இங்கே இருக்கப் போகும் கொஞ்ச நாட்களையும் மரியாதையாய் கழிக்கவே அவள் விரும்பினாள்.

"என்னம்மா, அந்நியமாகவே பேசுகிறாயே. சரி..உன் திருப்திக்கு , இங்கே உன்னால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய். சுருக்கமாக..ம்ம்..சரியாக சொல்லப்போனால், இதை உன் வீடாக நினைத்து உன் விருப்பம் போல் என்ன வேண்டுமானாலும் செய், எப்படி வேண்டுமானாலும் இரு " என்று வெகு தாராளமாய் உரிமையளித்தார்.

அதுவே அமைதி இழந்த அவள் மனதுக்கு நங்கூரமிட, அவரது களைத்த முகத்தை கவனித்துவிட்டு, "நீங்கள் ஓய்வெடுங்கள் தாத்தா.." என்று அவரிடம் இருந்துத் தெளிவான மனதுடன் விடைபெற்றாள்.

தன்னறைக்கு வந்தவள் சற்றுநேரம் அங்கிருந்த இருக்கையில் சாயந்து கண்மூடி கிடந்தாள். இனி சில மாதங்களுக்கு இந்த அறைதான் அவள் கூடு. தானும் தன் தாத்ததாவுமாக இருந்த கிராமத்து சிறுவீடு நினைவில் மோதியது. அதையே தனிமை என்று குறையாக தாத்தாவிடம் சினுங்கியது ஒரு காலம்! இன்று அந்த தனிமையிலும் தனிமையாய் தான் மட்டும் தனித்திருப்பது அதீத குறையாய் மருட்டியது.

என்ன இது?! இன்னும் சில மாதங்கள்.. பின் காசியாத்திரை முடித்து பேத்தியைப் பார்க்க தன் தாத்தா ஓடோடி வந்துவிடப் போகிறார். அதற்குள் தனிமை அது இது என்று மனதை போட்டு உலப்பிக்கொண்டு.. வலுக்கட்டாயமாக மனதை திருப்ப முயன்றாள் மிதுனா.

இந்த சுந்தரம் தாத்தா சீக்கிரமே வேலைக்கு வழி செய்தால் நன்றாக இருக்கும். ம்ம்..அதற்கு அந்த 'நள மகாராஜா' மனது வைக்க வேண்டுமே! இந்த நேரம் பார்த்து தானா அவனும் வெளியூர் செல்ல வேண்டும்? இந்நேரம் புறப்பட்டிருப்பானோ? அதுதான் அவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டானோ? அவன் எப்போதுமே முசுடு தானோ? மிதுனா தலையை உலுக்கிக் கொண்டாள். அங்கே சுற்றி இங்கே சுற்றி மறுபடியும் அந்த 'நளந்தனிலேயே' நிற்கிறதே இந்தப் பாழாய் போன மனது!
          



                                               By:K.Lankesh

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இருள் மறைத்த நிழல் -01

அதிகாலை சூரியனின் இளஞ்சூடு அந்த காலை குளிருக்கு இதமாக இருந்தது. மனதை அழுத்தும் பாரம் ஒரு புறம் இருந்தாலும் இயற்கையின் எழிலில் தன் மனதை பிடிவாதமாக திருப்பினாள் மிதுனா. அந்த பிரம்மாண்டமான வீட்டின் கம்பீரமும், அப்பொழுதுதான் பூத்திருந்த செவ்வரளி பூக்களும்,வீட்டின் வாயில்வரை இருபுறமும் சீராக பூத்து குலுங்கும் ரோஜாக்களும், எங்கும் செயற்கை வண்ணம் தோன்றாமல் அற்புதமாய் இருந்த அந்த தோட்டத்தின் ஒட்டுமொத்த நேர்த்தியும் அவளது கலக்கத்தை கொஞ்சம் மறக்கடிக்கத்தான் செய்தன. வீடா அது? மாளிகை என்பது பொருத்தமாக இருக்கும்.

அவள் மனதில் பரவி இருந்த இனம் புரியாத நிம்மதி அவளுக்கு வியப்பாக இருந்தது. இதில் உள்ள மனிதர்களும் அவளுக்கு அதே நிம்மதியை தருவார்களா? உள்ளடக்கிய பெருமூச்சும் கொஞ்சம் நம்பிக்கையின்மையுமாய் தான் வாயிலை நோக்கி அடுத்த அடியை வைத்தாள் மிதுனா. இவ்வளவு பெரிய வீட்டின் வாயிலில் ஒரு காவலாளியை கூட காணோமே என்று அவள் எண்ணிக்கொண்டு இருக்கையிலேயே, "என்னம்மா வேண்டும்? நீங்கள் யார்?" என்று கேள்விகளோடு ஒரு வேலையாள் அவளை நோக்கி விரைந்து வந்தான்.

எதிர்பாராது கேட்ட குரல் என்றாலும், எதிர்பார்த்திருந்த கேள்வி தான் என்பதால் தடுமாறாமல் அவளால் பதிலுறுக்க முடிந்தது. "இங்கே சுந்தரம் தாத்தா..சாரை பார்க்க வேண்டும். என் பெயர் மிதுனா. சந்தானம் ஐயா பேத்தி என்று சொன்னால் சாருக்கு தெரியும்."


சுந்தரம் முன்னாலேயே தகவல் தந்திருப்பார் போலும், வேலையாளின் பாவனை உடனே மாறி ஒரு மரியாதை அவனை தொற்றிக்கொண்டது. "அய்யா சொன்னாருங்கம்மா. ஆனா இன்னிக்கு வருவீங்கன்னு தெரியாது. நீங்க உள்ள போங்க. முன்னறைக்கு வலது பக்க அறையில் தான் பெரியவர் இப்போது இருப்பார். " என்று சொல்லி வழியும் காண்பித்துவிட்டு தோட்டத்திற்கு தண்ணீர் விட்ட குழாயை சுற்றி வைக்க சென்றுவிட்டான்.

ஹ்ம்ம்.. வழி காண்பித்ததோடு அவன் வேலை முடிந்து விட்டது. இனி உள்ளே சென்று என்ன சொல்ல போகிறாள்? 'என் தாத்தா காசிக்கு செல்லவேண்டி இருப்பதால்..எனக்கு வேறு போக்கிடம் இல்லாததால், நீங்கள் என் தாத்தாவிற்கு உயிர் சிநேகிதர் என்பதால், கொஞ்ச நாள் .. என் தாத்தா வரும் வரை, உங்கள் பாதுகாப்பில் இருக்க அனுமதி கொடுங்கள் ' என்றா? எவ்வளவு சங்கடமாக இருக்கிறது? இந்த தாத்தாவிற்கு ஏன் இதெல்லாம் புரியமாட்டேன் என்கிறது?

ஆனால், இத்தனை வருடங்களாக தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக ஒரு குறையும் இன்றி அருமையாக வளர்த்து, தன் கடைசி ஆசை வாழ்நாளில் ஒரு முறை காசிக்கு சென்று வருவது ஒன்று தான் என்று அவர் கூறியபோது அவளே தான் இந்த யோசனையை அவருக்கு சொன்னாள். குறிப்பாக இந்த சுந்தரம் தாத்தா வீட்டில் விடுங்கள் என்று கூறவில்லை என்றாலும், ஒரு நல்ல லேடீஸ் ஹாஸ்டலில் பாதுகாப்பாக இருப்பேன் தாத்தா என்று கூறியது அவள்தான். அவர் தான் ஒரு வாரம் கழித்து இந்த சுந்தரம் தாத்தாவை பற்றி அவளுக்கு சொல்லி அவளையும் சம்மதிக்க வைத்து இங்கே அனுப்பியும் வைத்தார். ஏதோவொரு லேடீஸ் ஹாஸ்டலில் அவளை விட அவருக்கு உடன்பாடில்லை.

சுந்தரம் அவரின் நெருங்கிய நண்பர். பால்ய சிநேகிதம். ஒரே குடும்பம் போல அந்நியோன்யமாம். பிறகு காலப்போக்கில் தத்தம் குடும்பம் என்று விதி அவர்களை பிரித்தது. அதே விதி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தற்செயலாய் சந்திக்கவும் வைத்தது. பிரிந்த நட்பு அதே சுருதியில் தொடங்கிய காலகட்டத்தில் தான் சந்தானத்தின் இந்த காசி பயணமும், அதன் விளைவாக மிதுனாவின் இந்த 'சுந்தரவன' பயணமும்.

முகம்கூட பார்த்தறியாத அந்த சுந்தரம் தாத்தா..அய்யா என்று சொல்ல வேண்டுமோ..அவர் அவளை எப்படி எதிர்கொள்வார்? அவர் அவளை நன்றாகவே நடத்தினாலும், அவரது குடும்பத்தாருக்கு அவள் வரவு நல்வரவாகுமா? காவலாளியின் பாவனையில் இருந்த வரவேற்புத் தன்மை சற்று தெம்பளித்தது. அவள் மேலும் குழம்பி தயங்குமுன், அந்த காவலாளி சொன்ன முன்னறையையே அடைந்துவிட்டாள். மேற்கொண்டு தானே வலபக்க அறை நோக்கி செல்வதா அல்லது குரல் கொடுப்பதா என்று அவள் தன்னுள் தர்க்கம் செய்தவாறே சில அடி எடுத்து வைத்து, பாதி சாத்தியிருந்த அந்த அறை கதவில் கை வைக்க, "வேறு ஏதாவது பேசுங்கள், தாத்தா!" என்று கணீரென்ற ஆண் குரல் ஒன்று அவளை தடுத்து நிறுத்தியது.

அறை வாயிலில் நிழலாடியதை கண்டு தலை திருப்பிய அந்த வளமான குரலுக்கு சொந்தக்காரன், கடுகடுத்த முகத்தோடு நிதானமாக எழுந்து அவளருகே வந்தான். வந்த அந்த இளைஞன் அதே கோபத்தோடே கேட்டான், "யார் நீ? கதவை தட்டி அனுமதி கேட்கும் 'basic manners' கூட தெரியாதா?"

அவளுக்கு அவமானமாக இருந்தது. இந்த அறையாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கதவின் மேல் கையை வைத்து விட்டாள் தான். ஆனால் பாதி சாத்தியிருந்த கதவு அப்படி எளிதாய் திறந்து கொள்ள..உள்ளே இவன் யாருடனோ பேசிக்கொண்டிருப்பான் என்று அவளுக்கு எப்படி தெரியும்? அதற்கு இவ்வளவு கடுமையா? வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம்? அவள் என்ன வேண்டுமென்றா ஒட்டு கேட்டாள்? அல்லது, அப்படி தான் இவர்கள் ரகசியம் பேசினார்களா? ஊருக்கே கேட்கும்படி உரக்க பேசிவிட்டு தன மேல் பாய்ந்தால் எப்படி? அப்படியே சிதம்பர ரகசியம் பேச வேண்டுமென்றால் கதவை தாளிட்டுக்கொண்டு பேச வேண்டியதுதானே? அவளுள்ளும் கோபம் குமுறிக்கொண்டு வர அவனுக்கு சரியாய் பதில் தர வாயெடுக்கையில், அவன் மேலும் கடுகென பொரிந்தான்.

"Hello?! கேட்டது புரியவில்லையா? தமிழ் தானே?" எரிச்சலும், கிண்டலுமாய் அவன் வினவ, வேகமாய் கைப்பையில் கிடந்த அந்த கடிதத்தை எடுத்தாள் மிதுனா. கணநேரத்தில் முடிவெடுத்து அதுவரை அசைவின்றி அவளை ஒரு சுளித்த பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்த அவனை தவிர்த்து, அவன் 'வேறு ஏதாவது பேச சொன்ன' அந்த தாத்தாவிடம் சென்று நீட்டினாள். அவர்தான் அவள் தேடி வந்த சுந்தரம் தாத்தாவாக இருக்க வேண்டும். இந்த கடுவன் பூனையிடம் அவளுக்கென்ன பேச்சு?!

கடிதத்தை மேலெழுந்தவாரியாக படித்துவிட்டு, "வாம்மா, உன்னை ரொம்பவும் எதிர்பார்த்திருந்தேன். பயணத்தில் களைத்திருப்பாய். குளித்து முடித்து, ஏதாவது சாப்பிட்டுவிட்டு வாம்மா. ஆற அமர பேசலாம்.", என்று பாசமாய் கூறினார்.

"தாத்தா, நான்.." என அவள் ஏதோ கூற வந்ததை தடுத்து, "எல்லாம், அப்புறம் பேசிக்கொள்ளலாம்..இதை உன் வீடாய் நினைத்துக்கொள் அம்மா" என்றார்.

அவரது உபசரிப்பு உள்ளத்தை தொட, சரி என தலை ஆட்டியவள், அவனை ஒரு வெற்றி பார்வை பார்த்தாள்.

என்னை கதவை தட்டி விட்டு வரச்சொன்னாயே, இப்போது பார், உன் தாத்தா எனக்கு கொடுத்த உரிமையை என்று அவனுக்கு பதிலடியாகத்தான் அவள் அவனை நோக்கினாள். அவளிடம் கடுமையாக பேசியதற்கு ஒரு வருத்தத்தையோ அல்லது குறைந்த பட்சமாக, அதீத கோபத்தையோ அவனிடம் எதிர்ப்பார்த்தவளுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.ஒரு கூரிய பார்வையை மட்டுமே அவள்பால் செலுத்தியவன், மேற்கொண்டு பேச விருப்பமோ, தெம்போ இல்லாதவர் போல முகம் சோர ஒரு பெருமூச்சு விட்ட தன் தாத்தாவை யோசனையோடு பார்த்தான்.

அவன் பார்வையை கவனித்த பெரியவர், "முத்துவிடம் சொல்லியிருந்தேன்..இவளுக்கு ஒரு அறையை ஒழித்து வைக்க..அவனிடம்..போகும் போது அவனிடம் சொல்லி விடப்பா.." என்று கோர்வையாக பேச முடியாது களைத்து போய் கண்களை மூடிக்கொண்டார்.

அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல், ஒரு கையசைவில் 'வா' என்று சைகை செய்த அவன், பின்னோடு அவள் வருகிறாளா, இல்லையா என்று கூட சட்டை செய்யாது அறையை விட்டு வெளியேறினான். அவனது துரித நடைக்கு ஈடு கொடுக்க அவள் கிட்டத்தட்ட ஓட வேண்டியிருந்தது.

மகா அலட்சியம் தான்! 'வா' என்று வாய் திறந்து அழைத்தால், தன் உயரத்தில் ஒரு இன்ச் குறைந்து விடுவானாக்கும். மனதுள் குமுறியவாரே அவனை வேக வேகமாக பின்தொடர்ந்தவள் அவன் சட்டென வெளி வாயிலில் நிற்க, அவன் முதுகின் மீது கிட்டத்தட்ட மோதியே விட்டாள்.

"Sorry Sir, Sorry..." என அவள் திணற மறுபடியும் அவன் முகத்தில் அதே ஏளனம். வேண்டுமென்றே அவனை இடித்ததாக நினைக்கிறானா? இருக்கும். எடுத்த எடுப்பிலேயே ஒட்டு கேட்டதாக நினைத்தவன் தானே! மனம் சோர்ந்தது மிதுனாவுக்கு. பேசாமல் ஏதாவது ஒரு விடுதியில் கௌரவமாக தங்கி இருக்கலாம்.

அவன் வந்ததை கவனித்த ஒரு வேலையாள் கையில் இருப்பதை அப்படியே கீழே போட்டுவிட்டு அவர்களை நோக்கி விரைந்து வந்தான்.முகத்தின் கடுமை மறைய, சாதாரண குரலில், "முத்து. இந்த அம்மாவிற்கு கீழே ஏதேனும் ஒரு அறையை ஒழித்து கொடு" என்றவன், அந்த முத்து ஏதோ கேள்வி கேட்க போவதை யூகித்து, "எனக்கு நேரமாகி விட்டது, எதுவானாலும் தாத்தா எழுந்தபின் அவரிடமே கேட்டுக்கொள்" என்று பொறுமையின்றி கைகடிகாரத்தை பார்த்தான்.

ஒரு அவசரத்தோடே அவள் பக்கம் திரும்பி, " ஏதும் தேவை என்றால் முத்துவை கேள். பெரும்பாலும் தோட்டத்திலோ வெளி வெரண்டாவிலோ தான் இருப்பான்" என்றவன், அதே அவசரதோடே தன் கார் garage-ஐ நோக்கி விரைந்தான். எடுத்த எடுப்பிலேயே ஏக வசனமா என்றிருந்தது அவளுக்கு.


முத்துவுக்கு என்ன குழப்பமோ தெரியவில்லை..தன் சின்ன முதலாளி சென்ற திசையையே சில வினாடிகள் பார்த்தவன், "சரி தான்.. பெரியவர் எழ இன்னும் நேரமிருக்கு..எப்படியும் பெரிய அய்யா சொன்னபடி தானே..சின்ன அய்யாவும் அதானே சொன்னார்.." என்று தனக்குத்தானே பேசிக்கொண்டது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ முடிவுக்கு வந்த முத்து, "வாங்கம்மா" என்று அவளை மீண்டும் வீட்டினுள் மாடி நோக்கி அழைத்துச சென்றான். ஆனால்..அவனுடைய 'சின்ன அய்யா' கீழே ஒரு அறை என்று தானே சொன்னான்?! மனம் தன் பாட்டில் குழம்பினாலும், கேள்வி ஏதும் கேட்காமல், மாடியில் அவன் காட்டிய அறைக்குள் சென்றாள். கையில் இருந்த பெட்டியை தரையிலும் , தோளில் கிடந்த தன் கைப்பையை அருகிருந்த ஒரு மேஜையிலும் வைத்துவிட்டு, "ரொம்ப thanks, முத்து" என்றாள்.

முகமலர்ந்த முத்து, "இருக்கட்டும்மா, எதுவும் தேவை என்றால் ஒரு குரல் கொடுங்க, ஓடி வந்துடுவேன்" என்று பவ்யமாய் கூறி கீழே இறங்கி சென்றுவிட்டான். கதவை சற்று தள்ளியவுடன் அதுவே மூடிக்கொண்டது. auto-lock போல! AC பொருத்தப்பட்ட அந்த அறையை நோட்டம்விட்டவள் ஒரு விருந்தாளியாக வந்த தனக்கு இவ்வளவு வசதியான அறையை ஒதுக்கியிருக்கிறார்களே என்று அதிசயித்துப்போனாள். சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு உயர் தர நட்சத்திர ஹோட்டல் அறை போன்று இருந்தது. சமையலறை ஒன்று தான் இல்லை. ஆனால் ஒரு குட்டி microwave-ம், mini fridge-ம் அந்த குறையை ஈடுகட்டின. ம்.. பணம் இருந்தால் எதுவும் செய்யலாம்
 தான்! ஊரில் தாத்தாவுடன் வசித்த அந்த சின்ன வீடு நினைவில் வந்தது. தலையை சிலுப்பினாள் மிதுனா. அன்பு ஒன்றே பிரதானமாக தாத்தாவோடு வசித்த, இனியும் வசிக்கப்போகும் இனிய இல்லம் அது ... அதை போய் இந்த தங்க கூண்டோடு ஒப்பிட்ட தன் மடமையை என்ன சொல்ல?!

வாழ்ந்து கெட்டவர் அவள் தாத்தா சந்தானம். தொழிலில் நொடித்துப்போனாலும், வயது பெண்ணான பேத்தியோடு கௌரவமாக வாழ தேவையான அளவிற்கு பணம் கையில் மிஞ்சியது. பணம் மட்டும் தான். மற்றபடி நிம்மதியையும், கௌரவத்தையும் கெடுக்கத்தான் இறந்து போன மகனின் இரண்டாம் தாரத்தின் வழியில் ஒரு முப்பது வயது மலை மாடு வந்து தொலைத்ததே! மிதுனாவை கட்ட வந்த முறை மாமன் என்று சொல்லிக்கொண்டு வேறு!

அந்த குடிகார வரதனுக்கு பயந்துதான் தாத்தா அவள் விடுதியில் தங்க மறுத்திருப்பார் என்று மிதுனாவுக்கு தோன்றியது. ஆனால் அவ்வளவு அவள் பாதுகாப்பிற்காக பார்ப்பவர், அவளை யார் பாதுகாப்பிலாவது இப்படி விட்டுவிட்டு, காசி யாத்திரை செல்ல துடித்ததுதான் அவளுக்கு புரியவில்லை.

ச்சு..பாவம் தாத்தா. தனக்கென இதுவரை ஒன்றும் செய்து கொண்டதில்லை. இந்த காசி பயணம் தவிர. இளவயதிலேயே மனைவியை இழந்த பின் தன் ஒரே மகனுக்காக மறுமணம் செய்து கொள்ளாதவர். தாய்க்கு தாயாய் , தந்தைக்கு தந்தையாய் அவர் வளர்த்த அதே மகன், தன் முப்பதாவது வயதில் , அவனது மனைவி மறைந்த அடுத்த வருடமே வேறு பெண்ணை பிடிவாதமாய் மணந்து வந்து காலில் விழுந்ததும், மனம் நொந்து, பேத்தியின் நல்வாழ்விற்காக தள்ளாத வயதில் மீண்டும் ஒரு முறை மிதுனாவுக்காக தாயாய் தந்தையாய் தன்னையே அர்ப்பணித்தவர். அவரது சொந்த ஆசையாய்..ஒரே ஆசையாய் அவர் அவளிடம் வாய்விட்டு சொன்னது இந்த காசி யாத்திரை ஒன்றுதான்.

அதற்கும் தான் எவ்வளவு முன்னேற்பாடு! தன் பால்ய சிநேகிதரான இந்த சுந்தரம் தாத்தாவிடம் பேசி, பேத்தி தங்கிக்கொள்ள பாதுகாப்பு செய்து, கூடவே படித்த படிப்பிற்கும் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து தர சொல்லி..வேலை..அடடா..அதுபற்றிக்
கூட கீழே சுந்தரம் தாத்தாவிடம் பேச வேண்டுமே..பரபரத்தது அவளுக்கு. உடை விஷயத்தில், இன்ன பிற விஷயங்களில் ரொம்பவும் கட்டுப்பாடு விதித்த தாத்தா, அவள் வேலைக்கு போக விரும்பியதை மட்டும் தட்டிப்பேசியதே இல்லை! சுய சம்பாத்தியம் வெகு அவசியம் என்று நினைத்தாரோ?! இதே சுந்தரம் தாத்தாவிடம் சொல்லி இருப்பதாகவும், அவர்களது கம்பெனியிலோ அல்லது அவர்களுக்கு தெரிந்த இடத்திலோ சுந்தரமே அவளுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்வார் என்றும் சந்தானம் சொல்லியிருந்தார். இன்றே எப்படியாவது சுந்தரம் தாத்தாவிடம் வேலை பற்றி பேச வேண்டும்..அப்படியே..முடிந்தால்
paying guest-ஆக தங்கி கொள்ள விருப்பம் என்றும் சொல்லிவிட வேண்டும் என்று மனதுக்குள் குறித்துக்கொண்டாள்.

                                                                    BY:

Cond...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜோக்ஸ்

"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?" "ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"

"பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு." "ஏன்?" "பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்."

"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்..." "அடையாளம் சொல்லுங்க..." "அது கோபமா குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"

"பேஷண்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தாச்சு ஆனா, மயக்க மருந்து ஸ்டாக் இல்லை டாக்டர், என்ன செய்யறது?" "ஆபத்துக்குப் பாவமில்லை.. என் ஷூ சாக்ஸை அவர் மூக்குக்கிட்டே லேசா காட்டிடு!"

கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை. மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!
"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?" "இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே" "எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"

"ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?" "நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..."

"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?" "அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."

இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து.... "யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.." "ஏன்..?" "பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"

"பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்" "ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு"

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இது எப்படி இருக்குது?

தலைவர் மஹிந்த அவர்கள் ஒரு முறை இந்திய சென்ற போது அங்கு அப்துல் கலாம் அவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது மஹிந்த அவர்கள் அப்துல் கலாம் அவர்களை பார்த்து கேட்டார் எப்படி ஒரு சிறந்த அரசியல் தலைவரை அடையாளம் கண்டு கொள்வது என்று. அதற்கு அப்துல் கலாம் அவர்கள் அதை அவரை சுற்றி உள்ள அறிவாளிகளில் தங்கியுள்ளது என்றார். அவர்கள் அறிவாளிகள் என்று அவர் எப்படி அடையாளம் கண்டு கொள்வர்? என்று கேட்டார் மஹிந்த அவர்கள். அதற்கு அப்துல் கலாம் அவர்கள், அதை அவர்களிடம் சிறந்த கேள்விகளை கேட்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றார். அப்துல் கலாம் அவர்கள் உடனே மன் மோகன் சிங்குக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவரிடம் கேட்டார். உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை....... அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்? அதற்கு மன் மோகன் சிங் உடனே அது நான் தான் என்று பதில் கூறினார். அதற்கு அப்துல் கலாம் அவர்கள் சரியாக சொன்னீர்கள் என்று வாழ்த்துக்கள் சொல்லி விடைகூறினார். அப்துல் கலாம் மஹிந்தவை பார்த்து புரிந்ததா என்று கேட்டார். மஹிந்த, ஆம் புரிந்தது நானும் இதை பயன் படுத்துவேன் என்று நாடு திருப்பினார்.

நாடு திருப்பிய பின் மஹிந்த அவர்கள் மேர்வின் சில்வாவை அழைத்து நான் கேட்கும் கேள்விக்கு விடை கூற முடியுமா? என்று கேட்டார். அதற்கு மேர்வின் சில்வா நிச்சசயமாக..... என்று பதில் கூறினார். தலைவர் மஹிந்த அவர்கள், உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை....... அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்? மேர்வின் சில்வா நீண்ட நேரம் யோசித்து விட்டு தனக்கு சிறிது நேரம் தரும்படி கேட்டார். மேர்வின் சில்வா அவர்கள் எல்லா அமைச்சர்களையும் அழைத்து விடை தெரியுமா என்று கேட்டார்? எல்லோரும் யோசித்தார்கள்.................
இறுதியாக மேர்வின் சில்வா அவர்கள் ரணிலுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி
நான் கேட்கும் கேள்விக்கு விடை கூற முடியுமா? என்று கேட்டார். உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை....... அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்? அதற்கு ரணில் விக்கரமசிங்கே உடனே அது நான் தான் என்று பதில் கூறினார். மேர்வின் சில்வா அவர்கள் மீண்டும் மஹிந்தவிடம் வந்து எனக்கு அது யார் என்று தெரியும் என்று சொன்னார். மஹிந்த யார் என்று கேட்ட போது.... அது எங்களுடைய ரணில் விக்கரமசிங்கே என்று பதில் கூறினார்.
அதற்கு மஹிந்த அது தவறு............ அது ................. மன் மோகன் சிங்................. என்று கூறினார்............................இது எப்படி இருக்குது?.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

விடியாத இரவு ’ - நளினியின் தொடர்.

அன்பான சகோதர சகோதரிகளே! இந்தத் தொடரின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். 21 ஆண்டுகளாக, சிறைக் கம்பிகளும், கான்கிரீட் சுவர்களுமே எனக்கு நண்பர்கள். வெளி உலகத்தை பார்த்தது கிடையாது. வெளி உலகம் எப்படி வாழ்கிறது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை தினந்தோறும் எனக்கு வரும் செய்தித் தாள்களை வைத்தே தெரிந்து கொள்கிறேன்.‘எனக்கு விடுதலை உண்டா, இல்லையா?’ என்பதே தெரியாமல் நான் தவித்துகொண்டிருந்தபோது, பேரிடியாக வந்தது, என் கணவர் முருகன் உள்ளிட்டோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தி. இந்தச் செய்தி வெளியான நாள் முதல், தமிழகம் மற்றும் உலகமெங்கும் எழுந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்கிறது. இன்று நீதிமன்றத் தடை உத்தரவால், மரணம் தற்காலிகமாக தள்ளிப் போடப்பட்டிருந்தாலும், உத்தரவு என்னவோ மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது.மரண தண்டனை ஒழிப்பு என்கிற சமீபத்திய விவாதத்தின்போது, ‘‘உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த பிறகு, உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்கலாமா? வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்தான் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்களே! இவர்களை உடனே தூக்கில் போடவேண்டும்’’ என்பதுபோன்ற பரவலான கருத்தாக்கங்கள் எழுந்தன. இந்த விவாதங்களுக்குள் போகும் முன்பாக, ‘நாங்கள் எப்படி கைது செய்யப் பட்டோம், எவ்வாறு நடத்தப்பட்டோம், எந்த சூழலில் எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன’ என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இளைய தலைமுறையினருக்கு எங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் தெரியாதல்லவா?   அதற்காகத்தான் உங்களை பத்திரிக்கை வாயிலாக சந்திக்க விழைகிறேன். 
எம் மீதான சித்ரவதைகளை எழுதுவதே இன்னுமொரு சித்ரவதைதான்.
 
 
அன்புடன் 
நளினி ஸ்ரீகரன்.
 
 
***********************************
 
 
 
 
14, ஜூன் -1991. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டு மூன்று வாரங்கள் முடிந்துவிட்டது. வழக்கத்திற்கு மாறாக அன்று ரொம்பவும் இருட்டாக இருப்பதுபோல உணர்ந்தேன்.
நானும் என் கணவர் ஸ்ரீகரனும்(முருகன்) இரவு 11 மணிக்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டோம். அப்போது நான், இரண்டு மாத கர்ப்பம். மூன்று போலீசார் எங்கள் அருகில் வந்து என்னையும், முருகனையும் கைது செய்கிறோம் என்றும், ஆட்டோவில் ஏறுங்கள் என்றும் உத்தரவிட்டனர். நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏற்றப்பட்டோம். ஆட்டோவின் இடது ஓரத்தில் ஒரு காவலர் அமர்ந்து கொண்டார். காவலர் அருகில் என் கணவர் முருகனும், முருகன் அருகில் நானும், எனக்கு அருகில் ஒரு உதவி ஆய்வாளரும், மற்றொரு காவலரும் அமர்ந்துகொண்டனர்.மூன்று பேர் உட்காரும் இடத்தில், நான்கு பேர் உட்காந்து இருந்ததால், அந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அந்த உதவியாளர், என் உடலில் படக்கூடாத இடங்களில் தன் கையை வைத்து, செய்யக்கூடாத காரியங்களைச் செய்தார். ஒரு தாயாக இருக்கும் என்னை, என் கணவர் அருகில் இருக்கும்போதே, இப்படி அசிங்கமாக நடந்துகொண்ட அந்த காவலர் எப்படிப்பட்டவராக இருக்க முடியும்? இப்போது  நினைத்தாலும் உடல் கூசுகிறது.   
 
 
‘கைது செய்யப்பட்டோம்’ என்கிற அதிர்ச்சியில் இருந்து மீள, ஒரு சில வினாடிகள்கூட கொடுக்கப்படாமல், எனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையின் வேதனையை அனுபவித்தால் மட்டுமே உங்களால் புரிந்துகொள்ள முடியும்.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், க்ரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது சி.பி.ஐ என்று அழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுக் குழுவின் ‘மல்லிகை’ அலுவலகம். அந்த மல்லிகை அலுவலகம் எனக்கும், என்னோடு கைது செய்யப்பட்டவர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு நரகத்தை காண்பிக்கப்போகிறது என்பது, அந்த ஆட்டோ காம்பவுண்டுக்குள் நுழையும்போது எனக்கு தெரியாது.ஆனால், மல்லிகைக்குள் நுழைந்த ஒரு சில நிமிடங்களிலேயே நரகம் தெரிந்துவிட்டது. பெயர்தான் மல்லிகையே தவிர, மல்லிகை மலருக்கு உண்டான மென்மையோ, மணமோ அந்த கட்டிடத்தில் துளியும் கிடையாது. மாறாக மலருக்கு நேர் மாறான மிருககுணம் உடைய மனிதர்களும், மலத்திலும், சிறுநீரிலும், வாந்தியிலும் என்னைப் போன்றவர்களைப் புரள வைக்கப்பட்ட அவலமும்தான் அந்தக் கட்டிடத்தின் அடையாளங்கள். மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, எந்த விதத்திலும் மனித உரிமைகளை மீறாமல், ராஜீவ் வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது என்று புத்தகம் எழுதும் அளவுக்கு மேடைதோறும் இப்போதும் பேசிவரும் அந்த முன்னாள் அதிகாரியின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.எங்களைப் பார்த்ததும், “கொலைகாரி சிக்கிட்டாளா? ரெண்டு நாய்களும் சிக்கிட்டாங்களா? அடிச்சு இவங்க முதுகுத் தோலை உரிங்க. அப்போதான் வழிக்கு வருவாங்க” என்று கடும் குரலில் உத்தரவிட்டார். நானும், என் கணவரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, தனித்தனி அறைகளுக்குள் இழுத்துச் செல்லப்பட்டோம். மிகவும் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் திட்டி, இடக்குமடக்கான கேள்விகளை கேட்டனர்.அரை மணிக்கும் மேலாக எனக்கு ஆபாச அர்ச்சனைகள் நீண்டுகொண்டிருந்தபோது, பக்கத்து அறையில் இருந்து நீண்ட அலறல் சத்தம் கேட்டது. அது, என் கணவர் வைக்கப்பட்டிருந்த அறை. வேகவேகமாக அந்த அறைக்குள் நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.அங்கே நான் கண்ட காட்சி! இப்போது நினைத்தாலும் என் உடல் நடுங்குகிறது. எழுதும் என் விரல்கள் ஆடுகின்றன. என் கணவரை நிர்வாணப்படுத்தி பல பேர் சுற்றி நின்று லத்தியால் அடித்துக் கொண்டிருந்தனர். என் கணவர் வேதனை தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருந்தார். நான், கண்களை மூடிக்கொண்டு “அவரை விட்டுவிடுங்கள், அடிக்காதீர்கள்” என்று அலறினேன், அழுதேன், கெஞ்சினேன்.ஆனால், லத்தி அடிகள் விழுந்துகொண்டே இருந்தது. அங்கிருந்த ஒரு அதிகாரி, “என்ன நடக்கிறது என்று பார்த்தாயா? சொல்லுகிறபடி கேட்காவிட்டால் உனக்கும் இதே கதிதான். உன் கணவரை அடித்தே கொன்று விடுவோம்” என்று கூறிவிட்டு, என்னை பழைய அறைக்கே இழுத்துச் சென்றுவிட்டார்கள்.அன்று இரவு முழுவதும் என்னை தூங்கவிடவில்லை. குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை. அந்த இரவிலும் அந்த அறையில் பளிச்சென எரிந்து கொண்டிருந்த விளக்குகள் என் கண்ணை உறுத்தின. அப்போது உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் கைகள் என் கழுத்தை நோக்கி நீண்டது!
 
-இரவுகள் நீளும். நன்றி, ‘மீடியா வாய்ஸ்’

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தொழில்நுட்பத்தின் மற்றுமொரு பரிணாமம்: உளவு பார்க்கும் செயற்கை பூச்சியினங்கள்

விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.

போரியல் மற்றும் உளவு பார்த்தலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன.

ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல், பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் உளவு பார்க்கும் நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டன.

அதன் பின்னர் செய்மதி மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

தற்காலத்தில் அதைவிட மிக நுணுக்கமான முறைகள் கையாளப்படுகின்றன.

அமெரிக்க இராணுவமானது இத்தகைய பல உளவு பார்க்கும் கருவிகளை கொண்டுள்ளது.
இவற்றை யராலும் இலகுவாக அடையாளம் காண முடியாத வண்ணம் அவை உருவாக்கப்பட்டுள்ளன.

இவை பறவைகள் மற்றும் பூச்சிகள் வடிவிலும் காணப்படுகின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

2020 இல் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி நேரடியாக ஆய்வு மேற்கொள்ள சீனா முடிவு

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா அளவிற்கு சீனா முன்னேற ஆர்வமாக உள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி அங்கு நேரடியாக ஆய்வுகளை மேற்கொள்ள சீனா முடிவு செய்துள்ளது.

சீனா தனக்கென்று விண்வெளியில் ஓர் ஆய்வு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதோடு, அதற்காக பொருட்கள், கருவிகளை ரொக்கட் மூலம் கொண்டு செல்லும் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவுள்ளது.

2013 இல் சந்திரனில் சீனா தனது ஆராய்ச்சியை ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதோடு, அதற்கான நிதியை சீன அரசு ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

டுவிட்டரை வாங்கப்போவது யார்?

சமூக வலைப்பின்னல் தளமான டுவிட்டரை வாங்குவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிறுவங்களின் அதிகாரிகளின் இடையே கீழ்மட்ட அளவில் இது தொடர்பில் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய டுவிட்டரின் பெறுமதி 8 முதல் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் கடந்த வருட வருவாய் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

டுவிட்டருக்கு உலகம் பூராகவும் 190 மில்லியன் பாவனையாளர்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் தினசரி 65 மில்லியன் டுவிட்டர்கள் பரிமாறப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

 'அப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள்.



இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவிக்கின்றார்.

சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆபிரிக்காவின் மேற்கு கரையோரப்பகுதியில் மோதலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது பூமியோடு மோதினால் இதன் சக்தி வெளிப்பாடு சுமார் 100 அணுகுண்டுகளுக்குச் சமனாகவிருக்குமென நாசா தெரிவித்துள்ளது.

எனினும் இது 2036 ஆம் ஆண்டு மோதுவதற்கான வாய்ப்பு 45,000 இற்கு 1 என்ற நிகழ்தகவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் நாம் எத்தகையதொரு சந்தர்ப்பத்திற்கும் முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.



மேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS