பண்டைய ராஜதானியாக விளங்கிய பொலனறுவை நகரம்
பண்டைய இலங்கையின் (கி.பி. 8461302) இரண்டாவது பெரிய தலைநகராக விளங்கியது பொலனறுவை ஆகும். அக்காலத்தில் இந் நகர் 6 கி. மீட்டர் சுற்று வட்டமான உறுதியான சுவரினால் பாதுகாக்கப்பட்டது.
இலங்கையின் மிக நீண்டது மகாவலி நதி மீதான அனைத்து குறுக்குப் பகுதிகளும் இந்நகரின் கட்டுப்பாட்டில்த்தான் இருந்தன. பொலனறுவையில் உள்ள பரந்துபட்டதும் நன்கு பேணப்படுவதுமான இடிபாடுகள், பண்டைய இலங்கையின் சிறப்பை எடுத்துக் கட்டுபவையாக விளங்குகின்றன. இவற்றில் சில சிறப்பு வாய்ந்த இடங்களும் அடங்கும். அரசமாளிகைகள் மற்றும் பௌத்த ஆலயங்களின் அழிவுச்சின்னங்கள், அரச மாளிகைக் கட்டடங்கள், ரான்கொட் விகாரை, லங்காதிலகே கிரி விகாரை, கல் விகாரை, பொலன்னறுவை வட்ட தந்த இல்லம், (வதடகே), சிவன் கோவில், அலகான பிரிவேனா ஆகியவை இந்த அழிவுற்ற சின்னங்களில் சிலவாகும். ஒருநாள் அதிகாலையில் புறப்பட்டால் அன்றே இந்த நகரின்முக்கியமான நினைவுச் சின்னங்களையும் பார்த்து விட முடியும்.
தற்போதைய பொலனறுவை நகரத்துக்கு வடக்காக கண்டிக்கு 90 மைல் வடக்காக பொலன்னறுவையின் புராதன அழிவுச் சின்னங்களை பார்க்க முடியும். இது கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இருந்து உள்ளதாகும். அக்கால கட்டத்தில் சோழ அரசர்கள் இலங்கையில் படை எடுப்பை நடத்தி அனுராதபுர நகரைத் தாக்கினர். பின் பொலனறுவையைக் கைப்பற்றினர்.
1070 ஆம் ஆண்டு றுகுணு பிரதேச இளவரசன் கீர்த்தி திராவிடர்களை போரில் வென்று துரத்தி இலங்கையை விஜயபாகு என்ற பெயரில் ஆண்டான். அனுராதபுரம் பாதுகாப்பற்றது என அவன் தனது இராசதானியாக பொலனறுவை நகரை ஆக்கிக் கொண்டான். அவனது காலத்தில் ஏராளமான ஆலயங்கள், மாளிகைகள், பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் பிரமாண்டமான வாவிகள் அங்கு கட்டப்பட்டன. இருப்பினும் 10 ஆம் நூற்றாண்டளவில் தமிழ் அரசர்கள் அடிக்கடி போரிடத் தொடங்கியதால் சிங்கள ராஜதானிகள் கோட்டே, கண்டி ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டன. பெயர் பெற்ற பிரமாண்டமான பராக்கிரமபாகு நீர்த்தேகமும் பொலன்னறுவையில் தான் உள்ளது.
அழிவடைந்த அரச மாளிகைக் கட்டடத் தொகுதியின் நடுவில் பராக்கிரமபாகு மன்னன் கி.பி. (11641196) கட்டிய அரச மாளிகையின் சிதைவுகள் காணப்படுகின்றன. அது 7 மாடிகள் உயரம் கொண்ட மரத்திலும் கல்லிலும் ஆன மிகப் பெரும் கட்டிடமாகும். தரை 100 அடி நீளமும் 43 அடி அகலமும் கொண்டது. மேல் தளங்கள் மரத்தினால் ஆனவை. ஆனால், மிகப் பெரிய 10 அடிகளும் உள்ள கீழ் சுவர் மட்டுமே இன்றும் உள்ளது.
மாளிகையின் கிழக்குப் புறத்தில் கேட்போர் கூடம் உள்ளது. பொலன்னறுவை அரசர்கள், மன்னர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்களை வரவேற்க இந்தக் கூடத்தைப் பாவித்துள்ளனர். இம்மண்டபத்துக்குச் செல்லும் உயர்ந்த படிகளின் மேல் கல்லினால் மிகவும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிங்கங்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இது ஆட்சியின் சின்னமாகும். வெளிச்சுவரின் கீழ் பகுதியில் யானைகள் செதுக்கப்பட்டுள்ளன.இதற்குப் பக்கத்தில் அரசர்கள் நீராடும் குளம் உள்ளது. பராக்கிரமபாகு வாவிக்கு அண்மித்ததாக தரையில் பராக்கிரமபாகு மன்னனின் வாரிசான நிசங்க மன்னனின் (கி.பி. 1187 1196) அரண்மனைச் சிதைவுகள் காணப்படுகின்றன. இக்கட்டிடங்களில் மன்னர்கள் குளிக்கும் இடம், மன்னனின் ஆலோசனை மண்டபம் ஆகியன காணப்படுகின்றன. இம்மண்டபத் தூண்களில் மன்னரது அமைச்சர்களின் பெயர்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
அரச மாளிகைக்கு சிறிது வடக்காக சிவன் ஆலயம் உள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் தமிழர் படையெடுப்பின் பின்னர் கட்டப்பட்டதாகும். சுவர்களில் காணப்படும் மிகத் தேர்ச்சியான கற்சிற்ப வேலைப்பாடுகள் அக்கால கட்டட வேலையாட்களின் திறமையைக் காட்டுவதாகும். பொலனறுவையில் பல சிவஆலயங்கள் உள்ளன. நாற்கோண மண்டபம் அதன் நீள் சதுர சுவர்களுக்குள் நிற்கிறது. பண்டைய அதிமதிப்பு வாய்ந்த பொருட்களை காவல் காக்கிறது. இதன் தென் கிழக்கு மூலையில் 59 அடி விட்டமுள்ள வட்டமான கட்டடம் ஒன்றுள்ளது. இது மத்திய ஸ்தூபிக்கு செல்லும் 4 நுழைவாயில்களைக் கொண்டது. அச்சந்நிதானத்தில் அமர்ந்திருக்கும் 4 புத்தர் சிலைகள் உள்ளன.
இதன் தென் கிழக்கு மூலையில் பொலன்னறுவையில்செழிப்புற்று இருந்த ஆலய கட்டிடக் கலையின் கெடிகே பாணிக்கு சிறந்த உதாரணமாக துபாராமாவைக் காணலாம். இங்கு அதன் கூரை தற்போதும் பழுதுபடாமல் இருக்கிறது.வதட கேக்கு மேற்காக லத மண்டபம் உள்ளது. இது சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சிறிய கோபுரமாகும். இதற்கப்பால் அதடகே உள்ளது. இது முதலாம் விஜயபாகு மன்னன் காலத்தில் கட்டப்பட்ட புனித தந்த கோவிலின் சிதைவுற்ற பகுதியாகும். வதட கேக்கு சிறிது தூரம் வடக்காக, கதடகே என்னும் நிசங்கமல்ல அரசன் காலத்தில் கட்டப்பட்ட தந்த ஆலயத்தின் சிதைவாகும். இதனையடுத்து இந்து ஆலயக் கட்டிடங்கள் காணப்படுகின்றன.நாற்கோண மண்டபத்தின் வட கிழக்கு மூலையில் சத்மஹால் பிரசாதாவின் சிதைவுகள் காணப்படுகின்றன. இது 6 தளம் கொண்ட பகோடா மாதிரியான கட்டடம் அகும். இலங்கையில் உள்ள ஏனைய கட்டடங்களை விட இது வேறுபட்டது.
தேவாலயங்கள்
நகர சுவர்களின் சுற்று வட்டத்துக்கு உள்ளே நாற்கோண மண்டப கட்டடத் தொகுதிக்கு வடக்காக மேலும் மூன்று ஆலயங்கள் உள்ளன. வீதியின் மேற்கில் சிவ ஆலயம், வீதிக்கு எதிர்ப்புறமாக விஷ்ணு தேவாலயம் மற்றும் மிகவும் பழைமையான ஒரு சிவாலயம் ஆகியவையும் இதனுள் அடங்கும். தெற்கில் பராக்கிரமபாகு விகாரை உள்ளது. பொலறுவையில் உள்ள மிகப் பெரும் தூபி இதுவாகும். பொலன்னறுவையில் உள்ள மிகப் பெரும் விகாரையாக ரன்கொட் விகாரை உள்ளது. இது 180 அடி உயரமானது. பராக்கிரமபாகு மன்னனின் காலத்தில் கட்டப்பட்ட கட்டட தொகுதியில் இவ்விகாரை உள்ளது.
நகரின் வடக்கில் உள்ள கட்டிடங்களில் மிகவும் உயரமானது புத்த சீமா பாசத வாகும். பௌத்த பிக்குகளின் கூட்ட மண்டபமாக இக்கட்டடம் விளங்கியது. இலங்காதிலக விகாரைக்கு அடுத்ததாக கிரி விகாரை (பால் போன்ற வெள்ளையான ஆலயம்) உள்ளது.
பொலனறுவையில் மிகவும் பேணப்பட்ட ஸ்தூபி இதுவாகும். பொலன்னறுவை ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் 7 நூற்றாண்டுகள் கவனிக்கப்படாது விட்டுச் செல்லப்பட்டபோதும் இந்த விகாரையின் வெள்ளையடிப்பு அழிந்து விடாமல் அப்படியே இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ்காரர்கள் வந்த பின்னர் இவ்விடம் கண்டு பிடிக்கப்பட்டது. பராக்கிரம பாகுவின் மகாராணியின் பெயரால் சுபத்ரா என இந்த டகோபாக் கட்டடங்கள் அழைக்கப்படுகின்றன. கல் விகாரை என்னும் மிகப் பெரிய ஆலயத்தை பராக்கிரமபாகு மன்னன் கட்ட ஏற்பாடுகள் செய்தான். ஆனால், அது கட்டி முடிக்கப்படுவதற்கு முன் அவன் மரணமாகி விட்டான். எனவே அது பூர்த்தியாகமலே காணப்படுகிறது.
பொலன்னறுவைக்கு அப்பால் மெதிரிகிரிய வதடகே உள்ளது. இது பொலன்னறுவைக்கு 80 கி.மீ. வடக்காகவும் மெதிரிகிரிய நகரத்துக்கு சுமார் 3 கி.மீ. வடக்காகவும் காணப்படுகின்றது. இக்கட்டடம் இயற்கை வனப்புள்ள சூழலில் கவர்ச்சிகரமாக அமைக்கப்பட்டதாகும். மெதிரிகிரிய கிராமத்துக்கு அண்மையாக பொலனறுவைக்கு சுமார் 30 கி.மீ. வடக்காக மண்டலகிரி விகாரையின் எச்சங்கள் காணப்படுகின்றன. மெதிரிகிரிய வதடகே என இது அழைக்கப்படுகின்றது. பொலனறுவை வதடகே போன்று இதுவும் அளவிலும் சிறந்த வேலைப்பாடுகளிலும் ஒத்ததாக இருக்கின்றது.மிக உயரமான தளத்தில் வதடகே அமைந்திருப்பதால் கிரனைட் கற்படிகளில் நீண்ட தூரம் ஏறி மேலே செல்ல வேண்டியுள்ளது. மிகவும் அழகாக செதுக்கப்பட்ட அமர்ந்த நிலையில் 4 புத்தர் சிலைகள் நான்கு திசைகளிலும் பார்த்த வண்ணம் உள்ளன.
மத்திய ஸ்தூபியைச் சுற்றியதாக உள் சுற்றில் 17 அடி உயரமுள்ள 16 கற்×ண்களும் மத்திய சுற்றில் 16 அடி உயரமுள்ள 20 கற்×ண்களும் வெளிச் சுற்றில் 9 அடி உயரமுள்ள 32 தூண்களும் இருக்கின்றன.வதடகேயைச் சுற்றி வைத்தியசாலைக் கட்டிட சிதைவுகளும் வைத்திய ரீதியான குளிப்புக்கு உதவிய கல் படகும் அவற்றில் எழுத்துக் குறிப்புகளும் காணப்படுகின்றன. மற்றும் குகை ஸ்தூபிகள், 2 குளங்கள் ஆகியனவும் உள்ளன.
சோபிதா








0 Response to "பண்டைய ராஜதானியாக விளங்கிய பொலனறுவை நகரம்"
Post a Comment