சிரிக்கலாம் வாங்க - பாகம் 1

"103க்கும் 105க்கும் நடுவுல எ‎ன்ன இருக்கு தெரியுமா?"

"104"

"அதா‎ன் இல்லை.. நடுவுல ‘0'தா‎ன் இருக்கு. நீங்க இன்னும் மேத்ஸ்ல வீக்குதா‎ன்!"
*****


நாம பெரிய ஆளா வரணும்னா ஏற்கெனவே பெரிய ஆளா‏ இருக்கறவங்க கூட கை கோர்த்துக்கணுமாம்.

"அப்படியா! வித் ப்ளெஷர்! நீ எ‎ன் கூட கை கோர்த்துக்கறதுல எனக்கு எந்த ஆட்சேப‎னையும் இல்ல..!"
*****


(பயாலஜி (Biology) வகுப்பில் ஆசிரியர் மாணவனிடம்....)

"இந்தப் பறவையோட காலைப் பார்த்து இ‏து என்ன பறவை‎ன்னு சொல்லு"

"தெரியலை சார்"

"‏இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உ‎ன் பேரு என்னடா?"

"எ‎ன் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!"
*****


"நாம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயி மோதிரம் மாத்திக்கலாமா?"

"வேண்டாம்"

"ஏ‎ன்?"

"எ‎ன் மோதிரம் நாலு கிராம்; உன் மோதிரம் ரெண்டு கிராம்தானே!!"
*****


(புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)

"நர்ஸ், ஒரு மொபைல் ‏இருந்தா கொடுங்க."

"எதுக்குடா செல்லம்?"

"நா‎ன் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டே‎னு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"
*****


"ஏண்டா.. உங்க அப்பா எ‎ந்நேரமும் உ‎ன்னைத் திட்டிக்கிட்டே இருக்காரு."

"ஹ..ஹ்ஹ.ஹா.... சிங்கத்தைக் கொஞ்ச முடியாதுல்ல.. அதா‎ன்!!"
*****


"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல ‏இருக்கு."

"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
*****


(‏ஐ.டி.தொழிலாளி, கார்ப்பொரேஷ‎ன் குப்பைத் தொழிலாளியிடம்..)

"எ‎ன் கையில டிகிரி இருக்கு; நெறய நாலெட்ஜ் ‏ இருக்கு; சொசைட்டில பெரிய அந்தஸ்து இ‏ருக்கு. உனக்கு??"

"நிரந்தரமான வேலை ‏இருக்கு!!"
*****


எங்க பேங்க்ல இன்ட்ரஸ்ட் இல்லாமயே லோன் கொடுக்கறோம்

"சார்.. கொடுக்கறதுதான் கொடுக்கறீங்க.. கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்டா கொடுத்தாதான் என்னவாம்?!"
****


"ஏன் இன்னிக்கு கிளாஸ்க்கு லேட்?"

"ஒரு பையன் என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தான் டீச்சர்"

"அதனால?"

"அவன் ரொம்ப ஸ்லோவா நடந்து வந்தான் டீச்சர்"
****


(டிவியில்.. நேரலையில்..)

டிவி காம்பியர் : நீங்க எங்கே இருக்கீங்க..?

நேயர் : தண்டபாணி தெரு, டி.நகர்

டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். உங்க டோர் நம்பர்?

நேயர் : 110

டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். நீங்க யாரு?

நேயர் : நான் உன் புருஷன்.. வீட்டுச் சாவியை எங்க வச்சிருக்க?"
****


"சாரி.. இப்போதைக்கு எங்க கம்பெனில வேலை எதுவும் இல்லை. நீங்க போகலாம்"

"அப்படினா நான்தான் உங்க கம்பெனிக்கு சரியான ஆள். வேலை கேட்டு தொந்தரவே பண்ண மாட்டேன் சார்!"
****


"நான் சீசனுக்கு சீசன் வியாபாரத்தை மாத்திடுவேன்"

"இப்போ என்ன வியாபாரம் பண்றே?"

"செருப்பு வியாபாரம். நல்லா சேல்ஸ் ஆகுது. முக்கியமா பிரஸ் மீட் நடக்குற இடங்கள்ல..!!"
****

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சிரிக்கலாம் வாங்க - பாகம் 1"