மஹிந்த சிந்தனை தொலைநோக்கினூடாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் பலாபலன்கள்?

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கவும் அவர்கள் முகம் கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கும் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தினூடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி செனட் சபையொன்று (இரண்டாவது மந்திரி சபை) நிறுவப்பட உள்ளதோடு வடக்கு கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்யவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மாகாண சபை
மாகாண சபைமுறை சம்பந்தப்பட்ட தேர்தல் முறையையும் பிரதேச சபை மற்றும் மாவட்ட விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கலப்பு முறையையும் உருவாக்குகின்ற முன்மொழிவொன்றையும் முன்வைக்கின்றேன். அதுவரை எவ்வித தாமதமுமின்றி 13 வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபையை மீண்டும் இயங்க வைப்பேன்.வட மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்காகவும் வடக்கு வாழ் மக்களின் வாழ்நிலையை மிக விரைவாக வளப்படுத்துவதற்குமாக செயற்படுத்தப்படுகின்ற வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தை மென்மேலும் பலப்படுத்தும் வகையில் மாகாண சபையில் மக்கள் பிரதிநிதிகளின் பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
செனற் சபை
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எவ்விதத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலும் பாராளுமன்றத்தின் அதியுயர் தன்மைக்கு பாதகம் ஏற்படாத வகையிலும் மாகாண சபைகளில் நிறைவேற்றப்படுகின்றன நியதி ஆக்கங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் என்பவற்றை மேலும் அர்த்தபுஷ்டியுடன் கலந்துரையாடுவதற்கும் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் அவர்களை ஆக்கமுடன் பங்கேற்கும்படி செய்வதற்காகவும் மதத் தலைவர்கள், தொழில் வாண்மையாளர்கள் போன்ற நேரடியாக வாக்குகளால் தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகளும் பாராளுமன்ற செயற்பாடுகளில் பங்களிப்பை செய்வதற்கு ஏற்றவாறு சகல அரசியல் கட்சிகளினதும், அமைப்புகளினதும் கருத்துக்களை கோரியதன் பின்னர் இரண்டாவது மந்திரி சபையொன்றை நிறுவுவதற்கு உத்தேசித்துள்ளேன்.
தேசிய சகவாழ்வுக்கு புதியதொரு பாதை
பெரும்பாலானோரின் இணக்கப்பாடு என்பவற்றையே அதன் அடிப்படையாகக் கருதுகின்றேன்.
கிழக்கின் உதயம்
பாணமவிலிருந்து புல்மோட்டை வரை கிழக்கு கரையோரப் பாதையையும் கந்தளாய் சேருவிலப் பாதையையும் அவசர அவசரமாக உருவாக்குகின்றோம். கிழக்கு மாகாணத்தில் எஞ்சியுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளையும் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்துநாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கிடையில் உள்ள பொருளாதார சமூக அரசியல் தொடர்புகளை மேம்படுத்துவேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வடமத்திய மாகாணத்துக்கும் கொழும்புக்கும் துரித போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு மரதங்கடவெல, பொலன்னறுவை, திருகோணமலைப் பாதைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் இறக்கண்டிப் பாலம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் யான் ஓய பாலம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துப் பாலங்களின் வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் அறுகம்குடாப் பாலம் திறக்கப்பட்டுள்ளதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடிப் பாலமும் புதிய கல்லடிப் பாலமும் மக்களுடைய உரிமைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசத்தில் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 59 புதிய நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பிரதான நீர்த்தாங்கிகள் 12 அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிதாக 164 பாடசாலைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 327 கட்டடங்கள் புனரமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடசாலையும் நவீன விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் கணனி நிலையத்தையும் கொண்டதாக அமைக்கப்படுகின்றது.
சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக வைத்தியசாலைகளுக்காக புதிதாக 55 வார்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. 445 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாழ்வாதார அபிவிருத்திக்காக 80.000 ஏக்கர் வயல்கள் பயிரிடப்பட்டுள்ள அதேநேரம் 2.500 வீட்டுத் தோட்டங்களும் 19 பழக்கிராமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் தொடர்ந்தும் மேற்குறிப்பிட்ட பயிர்ச்செய்கையை மேம்படுத்தி புதிய சந்தை முறை ஒன்றை அறிமுகப்படுத்துவேன்.
ஏற்றுமதி தயாரிப்புப் பிராந்தியம் ஒன்றை ஆரம்பிப்பேன்.
வாழ்வாதார அபிவிருத்திக்காக புதிதாக 100.000 ஏக்கர் வயல்களில் பயிர்செய்ய வழி செய்வேன். 5.000 வீட்டுத் தோட்டங்களையும் 100 பழக்கிராமங்களையும் உருவாக்குவேன்.
பால் உற்பத்தி செய்கின்ற தொழிலை மேம்படுத்துவதற்காக புதிதாக மூன்று மாதிரிப் பண்ணைகளை உருவாக்கியுள்துடன், பால் உற்பத்தி செய்கின்ற 100 கிராமங்களை அமைத்திருக்கிறேன்.
வடக்கின் வசந்தம்
வடமாகாணத்தில் எந்த ஒரு இடத்துக்கும் சுதந்திரமாக போய்வருவதற்கு இருந்த தடைகளை நான் முழுமையாக நீக்கியுள்ளேன்.
தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளை கணக்கிலெடுத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுப்பேன்.
வடக்கில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம், மிளகாய் உட்பட்ட விவசாய உற்பத்திகளுக்கு இலகுவான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாட்டில் ஏனைய பிரதேசங்களெங்கும் காணப்படும் பொருளாதார மையங்களுக்கு கொண்டு செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை சதொச ஊடாக ஏற்படுத்திக் கொடுப்பேன்.
மதவாச்சி – மன்னார் பாதை, யாழ்ப்பாணம் – பருத்தித்துறைப் பாதை, யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஊடாக காரைநகர்ப் பாதை, முருங்கன் – சிலாபத்துறை, ஒட்டுசுட்டான் – நெடுங்கேணிப் பாதை மற்றும் வவுனியா – ஹொரவப்பொத்தான பாதை என்பவற்றை விரிவாக்கி அபிவிருத்தி செய்வேன்.
யாழ்ப்பாணம் – கண்டி வீதி (ஏ-9) யாழ்ப்பாணம் – புத்தளம் வீதியை முன்னேற்றி அதிவேகப் பாதையாக மேம்படுத்துவேன்.சங்குப்பிட்டிப் பாலத்தை உடனே அமைத்து யாழ்ப்பாணக் குடாநாட்டை மன்னார் மற்றும் புத்தளம் பிரதேசங்களோடு தொடர்புபடுத்துவேன். அத்துடன் யாழ்ப்பாணத் தீவுகளை மேம்படுத்தி நெடுஞ்சாலை முறைமையின் ஊடாக ஒன்றோடு ஒன்று இணைத்து யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் தொடர்புபடுத்துவேன்.
யாழ். போதனா வைத்தியசாலையை முழுமையாக நவீனமயப்படுத்துவேன். அதற்கு இணையாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள வைத்தியசாலைகளையும் புனரமைப்பேன்.
துரையப்பா விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துவேன்.
சுதந்திரத்தின் அடையாள நகரமாக மாங்குளம் நகரத்தை அபிவிருத்தி செய்து மார்ச் மாதம் மக்களுக்கு உரித்தாக்குவேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு புதிதாக பொறியியல் பீடமொன்றை அமைத்துக் கொடுப்பேன். தொழில்நுட்பக் கல்லூரிக்கான விடுதி வசதிகளை விரிவாக்குவேன்.
வடமாகாணத்தில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உயர் வருமானங்களுக்கு வகை செய்யக்கூடியதான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாரிய அரிசி ஆலைகள் இரண்டை நிறுவுவேன்.
வடமாகாணத்தில் விவசாய எழுச்சிக்கு ஏற்புடையதாக விவசாய பீடம் ஒன்றை கிளிநொச்சி பிரதேசத்தில் நிறுவுவேன்.
யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்துவேன்.
தலைமன்னார் – மதவாச்சி – ஓமந்தை புகையிரதப் பாதையை 2011 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வேன்.
2012 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை தெற்காசியாவில் அதிசிறந்த நகரமாக மாற்றுவேன்.
கடந்த காலத்தில் விரும்பியோ விரும்பாமலோ தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்டு ஆயுதக் கலாசாரத்துக்குள் தமது வாழ்க்கையின் இளமைக் காலத்தைப் பறிகொடுத்துவிட்ட இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் அவர்களின் சமூகக் கலாசார அடையாளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புனர்வாழ்வுத் தராதரங்களின் அடிப்படையில் ஒரு வருட காலத்துக்குள் புனர்வாழ்வளித்து அவர்களது பெற்றோர்களிடம் கையளிப்பேன்.







0 Response to "மஹிந்த சிந்தனை தொலைநோக்கினூடாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் பலாபலன்கள்?"
Post a Comment