நடிகர் சூர்யா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

நடிகர் சூர்யா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீடுகளில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள சூர்யா வீட்டிலும், அடையாறில் உள்ள சூரியா, ஜோதிகா வீட்டிலும் நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 7 மணிக்கு தொடங்கி இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனையில் எதுவும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகவில்லை.
இருப்பினும் வருமான வரித்துறையினரின் இந்த திடீர் சோதனையால் தமிழ் திரையுலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







0 Response to "நடிகர் சூர்யா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை"
Post a Comment