ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்.


கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி அவர்கள் எமது மட்டக்களப்பு நகருக்கு விஜயம் செய்திருந்தார். அத்துடன் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதில் மாண்புமிகு முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், கௌரவ அமைச்சர் வி.முரளிதரன், அமைச்சர் அமிர் அலி, முன்னாள் பாரளமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான உட்பட பல அரசியல் சார் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு பேசிய முதலமைச்சர் எதிர் கட்சிக்குத் தாவிய மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் அவர்களின் சமகால அரசியல் நடத்தைகள் பற்றிய கண்டனங்களை வெளியிட்டதோடு, மாகாண சபை முறைமையில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களினால் கிழக்கு மாகாண சபை எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகளையும் ஜனாதிபதிக்கு விளக்கினார்.

இக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் முரளிதரன் அவர்கள் பயங்கர வாதத்தை முற்றாக ஒழித்த எமது தலைவருக்கே கிழக்கு மாகாண மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இக் கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொன்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு தமது ஆதரவினை வெளிக்கட்டினர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்."