அதிபரின் லீலைகள் - பதுளையில் சம்பவம்
மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள் எனச் சொல்லப்படுவதுண்டு. ஆனாலும் தாம் எமனுக்கு ஒப்பானவர்கள் என்பதை ஆசிரியர்கள் சிலர் நிரூபித்து வருகிறார்கள்.
பதுளைப் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று இதற்கு நல்லதோர் உதாரணமாகும்.
சம்பவம் இதுதான்:
பதுளை - பண்டாரவளை பகுதியிலுள்ள தோட்டப்பகுதி தமிழ்ப் பாடசாலையொன்றில் அதிபராக கடமையாற்றியவர் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர். அந்தப் பாடசாலை மாணவிகளிடம் இவர் புரிந்த லீலைகள் அப்பகுதி மக்களை கதிகலங்கச் செய்துள்ளது.
ஆசிரியர் தொழில் தவிர தான் நோய்களுக்கு மருந்து கொடுப்பதிலும் திறமைசாலி எனக் கூறிக்கொண்ட அதிபர் மருந்துகளை சேகரித்து வீட்டில் வைத்தியம் பார்த்து வந்தார். தன்னிடம் வரும் இளம் பெண்களுக்கு ஊசி ஏற்றி மருந்து கொடுப்பதுதான் இவரது பிரதான வேலை.
அவ்வாறு மருந்து தருவதாகக் கூறி தனது பாடசாலையில் கற்கும் மாணவியரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார் அந்த அதிபர்.
சட்டத்தின் பிடியில் சிக்கி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் இவர் நீண்டகாலமாக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த அதிபருடன் வெளிநாட்டு நபர் ஒருவர் தங்கியிருந்துள்ளார். அவர் இந்தச் சம்பவங்களை வீடீயோ காட்சிகளாக படம் எடுத்திருக்கலாம் என தோட்டத்திலுள்ள இளைஞர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அந்த வெளிநாட்டு நபரும் தலைமறைவாகியுள்ளமை காலம் கடந்த பின்னர் தான் தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட அதிபர் அப்பகுதி அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய உறவினர் என மக்கள் கூறுகின்றனர்.
பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதற்காக நம்பிக்கையுடன் பாடசாலைக்கு பெற்றோர் அனுப்புகின்றனர். ஆனால் பிள்ளைகளின் குறிப்பாக இளம் பெண்களின் வாழ்க்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் இவ்வாறான காமவெறியர்களை சமூகம் தண்டித்தே ஆக வேண்டும்.







0 Response to "அதிபரின் லீலைகள் - பதுளையில் சம்பவம்"
Post a Comment