எஸ்.அருள்சாமி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக மத்திய மாகாணத்தின் முன்னாள் தமிழ்க்கல்வியமைச்சரும் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளருமான எஸ்.அருள்சாமி இன்று 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயக்கர் எம்.லொக்குபண்டார முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே எஸ்.அருள்சாமியை தேர்தல் ஆணையாளர் நியமித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்துப்போட்டியிட்ட போது அமரர் பெ.சந்திரசேகரனுக்கு அடுத்தப்படியாக எஸ்.அருள்சாமி 19711 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இதன் பின்பு இடம்பெற்ற மத்திய மாகாணசபைத்தேர்தலில் போட்டியிட்ட இவர் மத்திய மாகாணசபை உறுப்பினராகவும் அதன் பின்பு மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சராகவும் செயற்பட்டதோடு மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகி தொழிலாளர் விடுதலை முன்னணி என்ற அமைப்பையும் ஏற்படுத்திக்கொண்டார்.
இந்த நிலையில் அமரர் பெ.சந்திரசேகரனின் வெற்றிடத்துக்கு எஸ்.அருள்சாமியை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கக் கூடாதென்று மலையக மக்கள் முன்னணி உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.







0 Response to "எஸ்.அருள்சாமி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்"
Post a Comment